• May 03 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி: சிறையில் அடைக்க காத்திருக்கும் பொன்சேகா..! samugammedia

Chithra / Nov 24th 2023, 10:14 am
image

Advertisement


உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு யார் முக்கிய சூத்திரதாரி என்பதை ஏற்கனவே அறிவித்துள்ளோம். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் சூத்திரதாரிகளையும், கடமைகளை தவறவிட்டவர்களையும் நிச்சயம் சிறைக்கு அனுப்புவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டன. ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தமது குறுகிய தேவைகளுக்காக தேசிய பாதுகாப்பினை பலவீனப்படுத்தின. இதன் பெறுபேறும் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் ஊடாக வெளிப்படுத்தப்பட்டது.

மேலும், பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்குவது அவசியமற்றது என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். பொருளாதார பாதிப்பு என்பதற்காக வீட்டுக்கு ஜன்னல் மற்றும் கதவுகளை பொருத்தாமல் இருக்க முடியாது.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இராணுவத்தினரது எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளது. இறுதி கட்ட யுத்தத்தின் போது 2 இலட்சமாக காணப்பட்ட இராணுவத்தினரது எண்ணிக்கை தற்போது 1,53000 ஆக காணப்படுகிறது.

நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் இராணுவத்துக்கு ஆயுதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் பயன்படுத்த முடியாத யுத்த தாங்கிகளே இராணுவத்திடம் உள்ளன. விமானப்படையிடம் ஒரு ஜெட் விமானம் மாத்திரமே உள்ளது.ஆகவே இம்முறை புதிய ஆயுதங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.  

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி: சிறையில் அடைக்க காத்திருக்கும் பொன்சேகா. samugammedia உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு யார் முக்கிய சூத்திரதாரி என்பதை ஏற்கனவே அறிவித்துள்ளோம். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் சூத்திரதாரிகளையும், கடமைகளை தவறவிட்டவர்களையும் நிச்சயம் சிறைக்கு அனுப்புவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டன. ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தமது குறுகிய தேவைகளுக்காக தேசிய பாதுகாப்பினை பலவீனப்படுத்தின. இதன் பெறுபேறும் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் ஊடாக வெளிப்படுத்தப்பட்டது.மேலும், பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்குவது அவசியமற்றது என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். பொருளாதார பாதிப்பு என்பதற்காக வீட்டுக்கு ஜன்னல் மற்றும் கதவுகளை பொருத்தாமல் இருக்க முடியாது.யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இராணுவத்தினரது எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளது. இறுதி கட்ட யுத்தத்தின் போது 2 இலட்சமாக காணப்பட்ட இராணுவத்தினரது எண்ணிக்கை தற்போது 1,53000 ஆக காணப்படுகிறது.நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் இராணுவத்துக்கு ஆயுதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் பயன்படுத்த முடியாத யுத்த தாங்கிகளே இராணுவத்திடம் உள்ளன. விமானப்படையிடம் ஒரு ஜெட் விமானம் மாத்திரமே உள்ளது.ஆகவே இம்முறை புதிய ஆயுதங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement