• May 22 2024

நல்லூரில் சிதறுதேங்காய் அடித்து மைத்திரிபால வழிபாடு! samugammedia

Chithra / Jun 29th 2023, 11:23 am
image

Advertisement

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம்(29) காலை நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

சைவ பண்பாட்டுடன் வேட்டி அணிந்து வந்த மைத்திரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

வழிபாட்டிற்கு பின்னர் ஆலயசூழலில் நின்ற முன்பள்ளி குழந்தைகள், வெளிநாட்டவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பெயரில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் மைத்திரிபால சிறிசேனா, இன்று வியாழக்கிழமை(29) முதல் மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளிலும்,சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார்.


நல்லூரில் சிதறுதேங்காய் அடித்து மைத்திரிபால வழிபாடு samugammedia யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம்(29) காலை நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.சைவ பண்பாட்டுடன் வேட்டி அணிந்து வந்த மைத்திரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.வழிபாட்டிற்கு பின்னர் ஆலயசூழலில் நின்ற முன்பள்ளி குழந்தைகள், வெளிநாட்டவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பெயரில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் மைத்திரிபால சிறிசேனா, இன்று வியாழக்கிழமை(29) முதல் மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளிலும்,சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement