• Jun 02 2024

யாழிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகம் சென்ற ஒருவர் கைது; பொலிஸார் தீவிர விசாரணை

Chithra / Feb 5th 2023, 10:18 am
image

Advertisement

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணக்கவாசகம் மகன் மோகனராஜா (42) என்பவர் சட்டவிரோதமாக படகு மூலம்  தமிழக கடலோரப் பகுதியான நாகை மாவட்டம் கீழையூர் அடுத்த வெள்ளப் பள்ளம் கிராமத்திற்குள் நேற்று இரவு நுழைந்துள்ளார்.

அவரை கண்டு சந்தேகமடைந்த அப்பகுதி  மீனவர்கள் உடனடியாக அளித்த  தகவலின் அடிப்படையில் கீழையூர் கடலோர காவல் குழும பொலிஸார் அங்கு விரைந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டதில்  இலங்கையில் இருந்து அகதியான தமிழக எல்லைக்கும்  நுழைந்தது தெரிய வந்துள்ளது.


தொடர்ந்து மோகனராஜாவை கைது செய்த பொலிஸார்  அவரை  நாகை கடலோர காவல் குழும காவல் நிலையம் அழைத்து  சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் அங்கு நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியில் வாழ வழியின்றி 2 லட்சம் பணம் கொடுத்து பைபர் படகு மூலம் அகதியாக வந்ததாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


தீவிர விசாரணைக்கு பின்னர் அவர் இலங்கை அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. 


யாழிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகம் சென்ற ஒருவர் கைது; பொலிஸார் தீவிர விசாரணை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணக்கவாசகம் மகன் மோகனராஜா (42) என்பவர் சட்டவிரோதமாக படகு மூலம்  தமிழக கடலோரப் பகுதியான நாகை மாவட்டம் கீழையூர் அடுத்த வெள்ளப் பள்ளம் கிராமத்திற்குள் நேற்று இரவு நுழைந்துள்ளார்.அவரை கண்டு சந்தேகமடைந்த அப்பகுதி  மீனவர்கள் உடனடியாக அளித்த  தகவலின் அடிப்படையில் கீழையூர் கடலோர காவல் குழும பொலிஸார் அங்கு விரைந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டதில்  இலங்கையில் இருந்து அகதியான தமிழக எல்லைக்கும்  நுழைந்தது தெரிய வந்துள்ளது.தொடர்ந்து மோகனராஜாவை கைது செய்த பொலிஸார்  அவரை  நாகை கடலோர காவல் குழும காவல் நிலையம் அழைத்து  சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விசாரணையில் அங்கு நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியில் வாழ வழியின்றி 2 லட்சம் பணம் கொடுத்து பைபர் படகு மூலம் அகதியாக வந்ததாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீவிர விசாரணைக்கு பின்னர் அவர் இலங்கை அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement