நாயிணை திருடி விற்பனைக்காக விளம்பரம் செய்தவர் கைது!

82

சுமார் 60,000 ரூபா பெறுமதியான டொபர்மேன் வகையினை சேர்ந்த நாய் உட்பட நான்கு கோழிகளை திருடிய நபரை கிடைத்த புகாரின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

தெலிக்கடை பகுதியில் வசிக்கும் 24 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நாயினை திருடி விற்பனை செய்யப் போவதாக இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார். அதைப் பார்த்த நாயின் உரிமையாளர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தெலிக்கடை பொலிஸ் அதிகாரி எம்.கே பெர்னாண்டோ அவர்கள் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி உள்ளார்.

சந்தேக நபரை 2 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க காலி உயர் நீதவாண் உத்தரவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: