• Jan 16 2025

மோட்டார் சைக்கிள்களை திருடியவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

Chithra / Jan 12th 2025, 11:40 am
image


களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்விலஹேனவத்த பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை வலய குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபரிடமிருந்து 1,750 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இவர் பல்வேறு மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இவர் மோட்டார் சைக்கிள்களை திருடி, அவற்றை குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் வழங்கி வந்துள்ளார்.

அதன்படி காலி, பேருவளை மற்றும் பொத்தல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களில் திருடப்பட்ட 5 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள்களை திருடியவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்விலஹேனவத்த பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.காலி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.களுத்துறை வலய குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதான நபரிடமிருந்து 1,750 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.இவர் பல்வேறு மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் மோட்டார் சைக்கிள்களை திருடி, அவற்றை குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் வழங்கி வந்துள்ளார்.அதன்படி காலி, பேருவளை மற்றும் பொத்தல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களில் திருடப்பட்ட 5 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement