• May 19 2024

மனைவியை அடித்துக் கொன்ற கணவன் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்ப்பு..! ஆதரவற்று தவிக்கும் பிள்ளைகள் samugammedia

Chithra / Nov 5th 2023, 10:39 am
image

Advertisement

 

அளுத்கம பிரதேசத்தில் குடும்ப வன்முறை காரணமாக மனைவியை அடித்துக் கொன்ற கணவன் அதே வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

அளுத்கம - தன்வத்தகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண்ணுக்கு 32 வயது மற்றும் அவரது கணவருக்கு 38 வயதாகின்றது.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மனைவியின் தலையில், கணவன் அடித்துள்ளார். பலத்த காயம் அடைந்த பெண் கீழே விழுந்ததை அடுத்து, கணவர் வீட்டின் முன் அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக தெரிய வருகிறது.

உயிரிழந்த தம்பதிக்கு 12, 10 மற்றும் 6 வயதுடைய மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். 

இந்த சம்பவம் நடந்த போது கடைசி மகன் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார்.

குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக நோய் காவு வண்டி ஒன்று வந்துள்ளது. எனினும் அவர் உயிரிழந்தமை தெரிந்து கொண்ட ஊழியர்கள் சடலத்தை எடுக்காமல் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் மரணங்கள் தொடர்பில் அளுத்கம பொலிஸார், களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நீதவானின் விசாரணையும் நடத்தப்பட உள்ளது.


மனைவியை அடித்துக் கொன்ற கணவன் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்ப்பு. ஆதரவற்று தவிக்கும் பிள்ளைகள் samugammedia  அளுத்கம பிரதேசத்தில் குடும்ப வன்முறை காரணமாக மனைவியை அடித்துக் கொன்ற கணவன் அதே வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.அளுத்கம - தன்வத்தகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த பெண்ணுக்கு 32 வயது மற்றும் அவரது கணவருக்கு 38 வயதாகின்றது.இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மனைவியின் தலையில், கணவன் அடித்துள்ளார். பலத்த காயம் அடைந்த பெண் கீழே விழுந்ததை அடுத்து, கணவர் வீட்டின் முன் அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக தெரிய வருகிறது.உயிரிழந்த தம்பதிக்கு 12, 10 மற்றும் 6 வயதுடைய மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்த சம்பவம் நடந்த போது கடைசி மகன் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார்.குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக நோய் காவு வண்டி ஒன்று வந்துள்ளது. எனினும் அவர் உயிரிழந்தமை தெரிந்து கொண்ட ஊழியர்கள் சடலத்தை எடுக்காமல் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திடீர் மரணங்கள் தொடர்பில் அளுத்கம பொலிஸார், களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நீதவானின் விசாரணையும் நடத்தப்பட உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement