• Apr 28 2024

வாடகைக்கு வாங்கிய காரை 40 லட்சம் ரூபாவுக்கு விற்ற ஆசாமி - யாழில் சம்பவம் samugammedia

Chithra / Apr 3rd 2023, 11:25 am
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு கார் ஒன்றை எடுத்து சென்று அதனை 40 லட்ச ரூபாவுக்கு விற்பனை செய்த சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல கார் வாடகைக்கு விடப்படும் நிறுவனம் ஒன்றில் இருந்து ஒரு மாத காலத்திற்கு கார் ஒன்றினை வாடகைக்கு எடுத்து சென்ற நபர் அதனை 52 லட்சம் ரூபாவுக்கு ஒருவரிடம் பேரம் பேசி 40 லட்ச ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார். 

குறித்த நபர் யாழ்ப்பாணம் சுண்டுக்குழி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இவ்வாறு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

52 லட்சம் ரூபாவிற்கு பேரம் பேசப்பட்ட நிலையில், 40 லட்சம் முன்பணமாக பெற்றுக்கொண்டு மிகுதி 12 லட்சம் காருக்கான பதிவுப் புத்தகத்தை வழங்கிவிட்டு பெற்றுக்கொள்வதாக சொல்லி குறித்த நபர் மாயமாகியிருக்கிறார் .

எவ்வாறு இருப்பினும் மோசடியாளர் பிடிக்கப்பட்டு கார் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, மோசடியில் ஈடுபட்ட நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாடகைக்கு வாங்கிய காரை 40 லட்சம் ரூபாவுக்கு விற்ற ஆசாமி - யாழில் சம்பவம் samugammedia யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு கார் ஒன்றை எடுத்து சென்று அதனை 40 லட்ச ரூபாவுக்கு விற்பனை செய்த சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல கார் வாடகைக்கு விடப்படும் நிறுவனம் ஒன்றில் இருந்து ஒரு மாத காலத்திற்கு கார் ஒன்றினை வாடகைக்கு எடுத்து சென்ற நபர் அதனை 52 லட்சம் ரூபாவுக்கு ஒருவரிடம் பேரம் பேசி 40 லட்ச ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார். குறித்த நபர் யாழ்ப்பாணம் சுண்டுக்குழி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இவ்வாறு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 52 லட்சம் ரூபாவிற்கு பேரம் பேசப்பட்ட நிலையில், 40 லட்சம் முன்பணமாக பெற்றுக்கொண்டு மிகுதி 12 லட்சம் காருக்கான பதிவுப் புத்தகத்தை வழங்கிவிட்டு பெற்றுக்கொள்வதாக சொல்லி குறித்த நபர் மாயமாகியிருக்கிறார் .எவ்வாறு இருப்பினும் மோசடியாளர் பிடிக்கப்பட்டு கார் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மோசடியில் ஈடுபட்ட நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement