• Jul 24 2025

மன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் தமிழ் எம்.பிக்கள் விடுத்த கோரிக்கை

Chithra / Jul 23rd 2025, 8:38 am
image

 

மன்னார் - இராமேஸ்வரம் இடையில் பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

பாராளுமன்றத்தில் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோரே இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

இதன்போது செல்வம் எம்.பி தெரிவிக்கையில்,

தலைமன்னார் - இராமேஸ்வரம் இடையே படகு சேசையை ஆரம்பிப்பது தொடர்பில் நீண்ட நாட்களாக பேசப்படுகிறது. 

இந்தியாவும் இதனை முன்னெடுத்துச் செல்ல தயாராக இருக்கின்றது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றது என்றார்.

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவிக்கையில்,

மன்னார் - இராமேஸ்வரம் இடையே குறைந்தளவான போக்குவரத்து தூரமே உள்ளது. ஆனால் காரைக்கால் - காங்கேசன்துறை இடையிலான படகு சேவைகள் தொடர்பிலேயே அரசாங்கம் கூறுகின்றது. 

இது நீண்ட தூரமாகும். வடக்கில் இந்த சேவைகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக வடக்கில் உள்ள மக்கள் நன்மையடைவர். என்றார்.  

இந்நிலையில் இலங்கை - இந்தியா இடையிலான பயணிகள் படகு சேவை ஊடாக இந்த வருடத்தில் இதுவரையில் 153 சேவைகள் இடம்பெற்றுள்ளன. 17000 பேர் வரையிலானோர் இரு நாடுகளுக்கும் இடையே வந்து போயுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்தார்.

தற்போது இரண்டு படகுகள் சேவையில் ஈடுபடுகின்றன. எனினும் இறங்குதுறை தொடர்பான பிரச்சினை உள்ளது. இந்தியா அதற்காக உதவ தயாராக இருக்கின்றது. என்றார்.

மன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் தமிழ் எம்.பிக்கள் விடுத்த கோரிக்கை  மன்னார் - இராமேஸ்வரம் இடையில் பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தனர்.பாராளுமன்றத்தில் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோரே இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.இதன்போது செல்வம் எம்.பி தெரிவிக்கையில்,தலைமன்னார் - இராமேஸ்வரம் இடையே படகு சேசையை ஆரம்பிப்பது தொடர்பில் நீண்ட நாட்களாக பேசப்படுகிறது. இந்தியாவும் இதனை முன்னெடுத்துச் செல்ல தயாராக இருக்கின்றது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றது என்றார்.இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவிக்கையில்,மன்னார் - இராமேஸ்வரம் இடையே குறைந்தளவான போக்குவரத்து தூரமே உள்ளது. ஆனால் காரைக்கால் - காங்கேசன்துறை இடையிலான படகு சேவைகள் தொடர்பிலேயே அரசாங்கம் கூறுகின்றது. இது நீண்ட தூரமாகும். வடக்கில் இந்த சேவைகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக வடக்கில் உள்ள மக்கள் நன்மையடைவர். என்றார்.  இந்நிலையில் இலங்கை - இந்தியா இடையிலான பயணிகள் படகு சேவை ஊடாக இந்த வருடத்தில் இதுவரையில் 153 சேவைகள் இடம்பெற்றுள்ளன. 17000 பேர் வரையிலானோர் இரு நாடுகளுக்கும் இடையே வந்து போயுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்தார்.தற்போது இரண்டு படகுகள் சேவையில் ஈடுபடுகின்றன. எனினும் இறங்குதுறை தொடர்பான பிரச்சினை உள்ளது. இந்தியா அதற்காக உதவ தயாராக இருக்கின்றது. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement