• Mar 10 2025

இந்திய மீனவர்கள் 17 பேருக்கு மன்னார் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Chithra / Mar 8th 2025, 3:32 pm
image

 

இலங்கை கடல் எல்லை பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும்  மேலும் ஒரு மீனவருக்கு இரண்டரை லட்சம் ரூபா தண்டப் பணமும் விதித்து விடுதலை செய்யுமாறு மன்னார் நீதவான்  நேற்று மாலை தீர்ப்பு வழங்கியுள்ளது

அதே நேரம் நபர் ஒருவர் அனுமதி பத்திரம் இன்றி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் இரண்டாவது தடவையாக ஈடுபட்டமை கண்டறியப்பட்ட நிலையில் குறித்த நபருக்கு 24 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 23/02/2025 தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 32 மீனவர்களில் நான்கு மீனவர்கள் முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு இலட்சத்து 50 ஆயிரம்    ரூபாய் வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதுடன் ஏனைய மீனவர்களை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

அதே நேரம் கடந்த 02/02/2025 கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களில் 9 பேர்   முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு லட்சத்து 50 ஆயிரம்   ரூபாய் வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதுடன் ஒருவர் இரண்டாவது தடவை இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 20/02/2025 கைது செய்யப்பட்ட  நான்கு மீனவர்களும் முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு லட்சத்து 50 ஆயிரம் இலட்சம் ரூபா வீதம் தண்டப்பணம் விதிக்கப் பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் நேற்று முன் தினம் மன்னார் தாழ்வுபாடு பகுதியில் கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும் எதிர்வரும் 14 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய மீனவர்கள் 17 பேருக்கு மன்னார் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு  இலங்கை கடல் எல்லை பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும்  மேலும் ஒரு மீனவருக்கு இரண்டரை லட்சம் ரூபா தண்டப் பணமும் விதித்து விடுதலை செய்யுமாறு மன்னார் நீதவான்  நேற்று மாலை தீர்ப்பு வழங்கியுள்ளதுஅதே நேரம் நபர் ஒருவர் அனுமதி பத்திரம் இன்றி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் இரண்டாவது தடவையாக ஈடுபட்டமை கண்டறியப்பட்ட நிலையில் குறித்த நபருக்கு 24 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக கடந்த 23/02/2025 தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 32 மீனவர்களில் நான்கு மீனவர்கள் முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு இலட்சத்து 50 ஆயிரம்    ரூபாய் வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதுடன் ஏனைய மீனவர்களை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.அதே நேரம் கடந்த 02/02/2025 கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களில் 9 பேர்   முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு லட்சத்து 50 ஆயிரம்   ரூபாய் வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதுடன் ஒருவர் இரண்டாவது தடவை இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் கடந்த 20/02/2025 கைது செய்யப்பட்ட  நான்கு மீனவர்களும் முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு லட்சத்து 50 ஆயிரம் இலட்சம் ரூபா வீதம் தண்டப்பணம் விதிக்கப் பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் நேற்று முன் தினம் மன்னார் தாழ்வுபாடு பகுதியில் கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும் எதிர்வரும் 14 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement