• Feb 06 2025

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத் திருவிழா- பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

Tamil nila / Dec 8th 2024, 6:02 pm
image

மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா திருப்பலி இன்று   ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர்.



பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா கடந்த  மாதம்  29 ஆம் திகதி  மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்து நவநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. நேற்று சனிக்கிழமை  மாலை வேஸ்பர் ஆராதனையும்,இன்று  ஞாயிற்றுக்கிழமை  காலை திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.


பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பங்குத்தந்தையின்  ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர்.


திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனியும்,அதனைத்தொடர்ந்து ஆசியும் மன்னார் மறைமாவட்ட ஆயரினால் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.


இதன் போது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




சிறப்பாக இடம் பெற்ற மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத் திருவிழா- பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா திருப்பலி இன்று   ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர்.பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா கடந்த  மாதம்  29 ஆம் திகதி  மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.தொடர்ந்து நவநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. நேற்று சனிக்கிழமை  மாலை வேஸ்பர் ஆராதனையும்,இன்று  ஞாயிற்றுக்கிழமை  காலை திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பங்குத்தந்தையின்  ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர்.திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனியும்,அதனைத்தொடர்ந்து ஆசியும் மன்னார் மறைமாவட்ட ஆயரினால் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.இதன் போது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement