• Apr 28 2024

ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தும் மார்பர்க் வைரஸ்!! பீதியில் உலக நாடுகள் - அறிகுறிகள், பாதிப்புகள் என்னென்ன? samugammedia

Chithra / Apr 8th 2023, 12:50 pm
image

Advertisement

கொரோனா பெருந்தொத்தின் தாக்கம் மெல்ல மெல்ல குறைவடைந்து நாடுகள் ஓரளவு பழைய நிலைக்கு திரும்பி வரும் நிலையில் இப்போது மீண்டும் ஒரு வைரஸ் தொற்று உருவாகி மக்கள் மனதில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.

வௌவால்களில் இருந்து இந்த வைரஸ் பரவுவதாக அறியப்பட்டுள்ள அதேவேளை குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளிடையே இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. 

மார்பர்க் வைரஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரஸ் தொற்று தொடர்பான மேலதிக தகவல்களையும் இது எவ்வாறு பரவுகின்றது என்பதையும் எவ்வாறு பொதுமக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதையும் விரிவாக பார்க்கலாம். 

எபோலா வகையைச் சேர்ந்த இந்த வைரஸ் தொற்று பரவும் நபர்களில் அரைவாசி வீத மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்துவதாகவும், அதீத காய்ச்சல் மற்றும் உள்ளார்ந்த குருதி பெருக்கை ஏற்படுத்துவதாகவும் அறியப்பட்டுள்ளது. 

இந்தத் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களில் பலர் குருதி இழப்பு காரணமாகவே இறக்கின்றனர் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

பாதிக்கப்படுபவர்களுக்கு உடலில் பல பாகங்களிலும் இவ்வாறான குருதி இழப்புகள் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. 

அத்தோடு இந்தத் தொற்று ஏற்படும் போது அதன் பக்க விளைவுகள் தாங்க முடியாத நிலைக்கு நோயாளர்களை தள்ளுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். 


அண்மையில் நீங்கள் ஆப்பிரிக்காவுக்கு சென்று வந்தவர்களாக இருந்தால், அல்லது ஆபிரிக்காவுக்கு சென்று வந்த யாரோடேனும் தொடுகையில் இருந்திருந்தால், அல்லது அருகாமையில் இருந்திருந்தால் பின்வரும் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதை கவனமாக அவதானிக்க வேண்டும். அதீத காய்ச்சல், உடல் தசைகளில் வலி, வயிற்றுப்போக்கு, தலைவலி, வாந்தி, குருதிப்போக்கு போன்றவை.

இப்போது ஆப்பிரிக்காவில் இரண்டு நாடுகள் இந்த வைரஸ் தாக்கத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. முதலாவது தன்ஸானியா இரண்டாவது ஈகுவேட்டோரியல் கினி. 

தன்சனியாவில் வைரஸ் தாக்கத்தால் ஐந்து பேர் உயிரிழந்து உள்ளனர். ஐந்து பேருடன் தொடர்பில் இருந்த நபர்களை தடமறிந்து இப்போது மருத்துவக் குழு வைரஸ் தொற்றின் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறது. 

ஈக்குவேடோரியல் கினியில் மொத்தம் 13 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதாக அறியப்பட்ட நிலையில் 9 பேர் இறந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்றினால் இறப்பு வீதம் மிக அதிகமாக உள்ளது. அதாவது 24 முதல் 88 அளவுக்கு இறப்பு வீதத்தைக் கொண்டுள்ளது.

இங்கே அவதானிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், கொரோனா தொற்று ஏற்பட்டபோது அதிக அளவு இறப்பு வீதத்தைக் கொண்ட நாடாக பெரு காணப்பட்டது. அங்கே இறப்பு வீதம் ஐந்து வீதம் அளவிலேயே இருந்தது. 


ஆனால் இப்போது மார்பெக் வைரஸின் இறப்பு வீதம் 24 முதல் 88 அளவில் இருப்பதால் கொரோனா வைரஸ் உடன் ஒப்பிடும்போது இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வைரஸாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

இவ்வளவு பாரிய வைரஸ் தொற்று ஒன்றை எதிர்கொள்வதற்கு உலகில் எந்த ஒரு நாடும் இன்னும் தயார் நிலையில் இல்லை. இதன் காரணமாக நாடுகள் இப்போது துரிதமாக எச்சரிக்கை நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. 

கடந்த மார்ச் 31 ஆம் தேதி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தொற்று நோய் தடுப்பு அமைப்பு பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அது மாத்திரமன்றி ஆபிரிக்காவில் நோய் தொற்றை சமாளிப்பதற்காக மருத்துவ ஊழியர்களையும் அனுப்பி உள்ளது. 

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஆகிய நாடுகள் தன்ஸனியா, ஈக்வடோரியல் கினி ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என பிரஜைகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த வைரஸ்கள் பொதுவாக பழம் உண்ணும் வௌவால்கள் மூலம் பரவியிருக்கலாம் என கருதப்படும் அதேவேளை ஆப்பிரிக்க காடுகளில் உள்ள குரங்குகள் மற்றும் பன்றிகள் ஆகிய விலங்குகளும் இந்த வைரஸ் தொற்றுக்கு காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.


உண்மையில் இந்த வைரஸ் முதல் முறையாக 1967ஆம் ஆண்டில் இனம் காணப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து ஜெர்மனியின் மார்பெக் மற்றும் பிரான்போர்ட் ஆகிய நகரங்களில் இந்த தொற்று அதிக அளவில் பரவியது. 

இதன் பின்னர் ஷர்பியாவில் பெல் கிரேட் நகரத்தில் பரவியதாகவும் அறியப்படுகின்றது. எவ்வாராயினும் இதன் பின்னர் வைரஸ் ஆப்பிரிக்கா கண்டத்தை விட்டு வெளியே எங்கும் பரவவில்லை என குறிப்பிடப்படுகின்றது. 

கடந்த 40 வருடங்களில் ஆபிரிக்காவை விட வேறு கண்டங்களில் இரண்டே இரண்டு மார்பெக் வைரஸ் தொற்று சந்தர்ப்பங்கள் மாத்திரமே இனங்காணப்பட்டிருந்தது. 

ஆபிரிக்க நாடுகளில் கானா, உகந்தா, தென்னாபிரிக்கா, ஜிம்பாவே, கோங்கோ ஆகிய பல நாடுகளில் பரவி இருந்தது. மிகப்பெரிய தொற்று 2005 ஆம் ஆண்டு அங்கோலாவில் இனம் காணப்பட்டது. அப்போது 300க்கும் மேற்பட்ட மக்கள் இறக்க நேரிட்டது. 

இப்போது உள்ள முக்கியமான கேள்வி, இந்த வைரஸுக்கு எதிராக தடுப்பூசி அல்லது சிகிச்சை உள்ளதா என்பது. இதற்கான பதில் "இல்லை" என்பதே. இப்போது இதற்கான தடுப்பூசிகளோ, பிரத்தியேக சிகிச்சைகளோ காணப்படவில்லை. 

எவ்வாராயினும் காய்ச்சல், வாந்தி,  வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகளுக்கான சிகிச்சைகள் மாத்திரம் வழங்கப்பட்டு வருகின்றன. 

மக்கள் பொதுவாக அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சையை நாட வேண்டும் என வைத்தியர்கள் கேட்டுக்கொள்கின்றனர். 

சாதாரணமாக போதுமான அளவு நீர் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் வைத்தியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தும் மார்பர்க் வைரஸ் பீதியில் உலக நாடுகள் - அறிகுறிகள், பாதிப்புகள் என்னென்ன samugammedia கொரோனா பெருந்தொத்தின் தாக்கம் மெல்ல மெல்ல குறைவடைந்து நாடுகள் ஓரளவு பழைய நிலைக்கு திரும்பி வரும் நிலையில் இப்போது மீண்டும் ஒரு வைரஸ் தொற்று உருவாகி மக்கள் மனதில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.வௌவால்களில் இருந்து இந்த வைரஸ் பரவுவதாக அறியப்பட்டுள்ள அதேவேளை குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளிடையே இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. மார்பர்க் வைரஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரஸ் தொற்று தொடர்பான மேலதிக தகவல்களையும் இது எவ்வாறு பரவுகின்றது என்பதையும் எவ்வாறு பொதுமக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதையும் விரிவாக பார்க்கலாம். எபோலா வகையைச் சேர்ந்த இந்த வைரஸ் தொற்று பரவும் நபர்களில் அரைவாசி வீத மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்துவதாகவும், அதீத காய்ச்சல் மற்றும் உள்ளார்ந்த குருதி பெருக்கை ஏற்படுத்துவதாகவும் அறியப்பட்டுள்ளது. இந்தத் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களில் பலர் குருதி இழப்பு காரணமாகவே இறக்கின்றனர் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பாதிக்கப்படுபவர்களுக்கு உடலில் பல பாகங்களிலும் இவ்வாறான குருதி இழப்புகள் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. அத்தோடு இந்தத் தொற்று ஏற்படும் போது அதன் பக்க விளைவுகள் தாங்க முடியாத நிலைக்கு நோயாளர்களை தள்ளுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அண்மையில் நீங்கள் ஆப்பிரிக்காவுக்கு சென்று வந்தவர்களாக இருந்தால், அல்லது ஆபிரிக்காவுக்கு சென்று வந்த யாரோடேனும் தொடுகையில் இருந்திருந்தால், அல்லது அருகாமையில் இருந்திருந்தால் பின்வரும் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதை கவனமாக அவதானிக்க வேண்டும். அதீத காய்ச்சல், உடல் தசைகளில் வலி, வயிற்றுப்போக்கு, தலைவலி, வாந்தி, குருதிப்போக்கு போன்றவை.இப்போது ஆப்பிரிக்காவில் இரண்டு நாடுகள் இந்த வைரஸ் தாக்கத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. முதலாவது தன்ஸானியா இரண்டாவது ஈகுவேட்டோரியல் கினி. தன்சனியாவில் வைரஸ் தாக்கத்தால் ஐந்து பேர் உயிரிழந்து உள்ளனர். ஐந்து பேருடன் தொடர்பில் இருந்த நபர்களை தடமறிந்து இப்போது மருத்துவக் குழு வைரஸ் தொற்றின் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறது. ஈக்குவேடோரியல் கினியில் மொத்தம் 13 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதாக அறியப்பட்ட நிலையில் 9 பேர் இறந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்றினால் இறப்பு வீதம் மிக அதிகமாக உள்ளது. அதாவது 24 முதல் 88 அளவுக்கு இறப்பு வீதத்தைக் கொண்டுள்ளது.இங்கே அவதானிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், கொரோனா தொற்று ஏற்பட்டபோது அதிக அளவு இறப்பு வீதத்தைக் கொண்ட நாடாக பெரு காணப்பட்டது. அங்கே இறப்பு வீதம் ஐந்து வீதம் அளவிலேயே இருந்தது. ஆனால் இப்போது மார்பெக் வைரஸின் இறப்பு வீதம் 24 முதல் 88 அளவில் இருப்பதால் கொரோனா வைரஸ் உடன் ஒப்பிடும்போது இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வைரஸாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வளவு பாரிய வைரஸ் தொற்று ஒன்றை எதிர்கொள்வதற்கு உலகில் எந்த ஒரு நாடும் இன்னும் தயார் நிலையில் இல்லை. இதன் காரணமாக நாடுகள் இப்போது துரிதமாக எச்சரிக்கை நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. கடந்த மார்ச் 31 ஆம் தேதி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தொற்று நோய் தடுப்பு அமைப்பு பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.அது மாத்திரமன்றி ஆபிரிக்காவில் நோய் தொற்றை சமாளிப்பதற்காக மருத்துவ ஊழியர்களையும் அனுப்பி உள்ளது. சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஆகிய நாடுகள் தன்ஸனியா, ஈக்வடோரியல் கினி ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என பிரஜைகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.இந்த வைரஸ்கள் பொதுவாக பழம் உண்ணும் வௌவால்கள் மூலம் பரவியிருக்கலாம் என கருதப்படும் அதேவேளை ஆப்பிரிக்க காடுகளில் உள்ள குரங்குகள் மற்றும் பன்றிகள் ஆகிய விலங்குகளும் இந்த வைரஸ் தொற்றுக்கு காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.உண்மையில் இந்த வைரஸ் முதல் முறையாக 1967ஆம் ஆண்டில் இனம் காணப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து ஜெர்மனியின் மார்பெக் மற்றும் பிரான்போர்ட் ஆகிய நகரங்களில் இந்த தொற்று அதிக அளவில் பரவியது. இதன் பின்னர் ஷர்பியாவில் பெல் கிரேட் நகரத்தில் பரவியதாகவும் அறியப்படுகின்றது. எவ்வாராயினும் இதன் பின்னர் வைரஸ் ஆப்பிரிக்கா கண்டத்தை விட்டு வெளியே எங்கும் பரவவில்லை என குறிப்பிடப்படுகின்றது. கடந்த 40 வருடங்களில் ஆபிரிக்காவை விட வேறு கண்டங்களில் இரண்டே இரண்டு மார்பெக் வைரஸ் தொற்று சந்தர்ப்பங்கள் மாத்திரமே இனங்காணப்பட்டிருந்தது. ஆபிரிக்க நாடுகளில் கானா, உகந்தா, தென்னாபிரிக்கா, ஜிம்பாவே, கோங்கோ ஆகிய பல நாடுகளில் பரவி இருந்தது. மிகப்பெரிய தொற்று 2005 ஆம் ஆண்டு அங்கோலாவில் இனம் காணப்பட்டது. அப்போது 300க்கும் மேற்பட்ட மக்கள் இறக்க நேரிட்டது. இப்போது உள்ள முக்கியமான கேள்வி, இந்த வைரஸுக்கு எதிராக தடுப்பூசி அல்லது சிகிச்சை உள்ளதா என்பது. இதற்கான பதில் "இல்லை" என்பதே. இப்போது இதற்கான தடுப்பூசிகளோ, பிரத்தியேக சிகிச்சைகளோ காணப்படவில்லை. எவ்வாராயினும் காய்ச்சல், வாந்தி,  வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகளுக்கான சிகிச்சைகள் மாத்திரம் வழங்கப்பட்டு வருகின்றன. மக்கள் பொதுவாக அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சையை நாட வேண்டும் என வைத்தியர்கள் கேட்டுக்கொள்கின்றனர். சாதாரணமாக போதுமான அளவு நீர் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் வைத்தியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement