52 ஆயிரம் கோடி ரூபாயை இழந்த மார்க்: எப்படி தெரியுமா?

256

உலகளவில் பேஸ்புக், வாட்ஸ் ஆப் மற்றும் மெசேஞ்சர் போன்றவை பல நாடுகளில் முடங்கிய காரணத்தால் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பல கோடிகளை இழந்துள்ளார்.

சமூக வலைத்தளமான பேஸ்புக் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவ்வப்போது முடங்கி வருவது வழக்கமாகி வருகிறது.

அதன்படி, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, ஒருமணி நேரம், இரண்டு மணி நேரம் பேஸ்புக் முடக்குவது தற்போது வழக்கமாகிவிட்டது.

மேலும், பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை எப்போது வாங்கியதோ, அப்போதில் இருந்து அந்த செயலிகளும் முடங்கி வருகிறது.

நேற்று திங்கட்கிழமை இரவு பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடக்கப்பட்டுள்ளது.

எனினும், 7 மணி நேரம் கழித்து இன்று காலை இந்த செயலிகள் மீண்டும் பழையபடி செயல்பட தொடங்கியுள்ளது.

உண்மையில் இந்த முடக்கத்திற்கு என்ன காரணம் என்பதை பேஸ்புக் நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் இதற்கான காரணம் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் 7 மணி நேரம் முடக்கம் காரணமாக 52 ஆயிரம் கோடி ரூபாயை மார்க் ஜுக்கர்பெர்க் இழந்துள்ளார்.

இந்த டிஎன்எஸ் பக்கத்தில் இருந்து பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் வெளியேறிய காரணத்தால் இப்படி நேர்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் நிறுவனங்கள் விளம்பரத்தை நம்பி உள்ள நிலையில், 7 மணி நேர முடக்கம் காரணமாக, பேஸ்புக் பக்கத்தில் இருந்து பல நிறுவனங்கள் விளம்பரங்களை எடுத்துக்கொண்டுள்ளன.

இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 5 சதவிகிதம் வரை சரிந்துள்ளதோடு, இதன் காரணமாக மார்க் ஜுக்கர்பெர்க் 52 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் விளம்பரம், அரசியல் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 15 சதவிகிதம் வரை இழப்பை சந்தித்துள்ளது.

மேலும் பேஸ்புக், இன்ஸ்ட்டா முடக்கத்திற்கு மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டுள்ளார். “உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்பில் இருக்க நீங்கள் எங்களின் சமூக வலைத்தளங்களில் எவ்வளவு சார்ந்து இருக்கிறீர்கள் என்று தெரியும். இடையூறுக்கு மன்னித்து விடுங்கள். வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை மீண்டும் செயல்பாட்டிற்கு வந்து விட்டன” என்று மார்க் ஜுக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த இரண்டு வருடங்களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பெற்று உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: