சிறிலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் மேர்வின் சில்வா,இலங்கையின் அரசியலில் உள்ள சில முக்கிய பிரமுகர்களின் ஆதரவுடன் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை புது யுகத்தில் காலடி எடுத்து வைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை விமர்சித்துள்ள மேர்வின் சில்வா, நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சிக்கு தலைமை தாங்க தாம் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய கட்சியில் மைத்திரி குணரட்ன, மகேந்திர ஜயசேகர மற்றும் நவின் குணரத்ன உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அங்கம் வகிப்பார்கள் எனவும் அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ள மேர்வின் சில்வா.samugammedia சிறிலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் மேர்வின் சில்வா,இலங்கையின் அரசியலில் உள்ள சில முக்கிய பிரமுகர்களின் ஆதரவுடன் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.அத்துடன், இலங்கை புது யுகத்தில் காலடி எடுத்து வைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை விமர்சித்துள்ள மேர்வின் சில்வா, நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சிக்கு தலைமை தாங்க தாம் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.இந்த புதிய கட்சியில் மைத்திரி குணரட்ன, மகேந்திர ஜயசேகர மற்றும் நவின் குணரத்ன உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அங்கம் வகிப்பார்கள் எனவும் அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.