• May 19 2024

அரசுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டங்கள் – தேசிய மக்கள் சக்தி விடுத்துள்ள எச்சரிக்கை samugammedia

Chithra / Oct 23rd 2023, 7:12 am
image

Advertisement

 

ராஜபக்ச அரசாங்கத்தினர் எவ்வாறு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்களோ அதுபோல் ரணிலும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார் என தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர், எதிர்வரும் நாட்களில் இந்த அரசாங்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம் என்றார்.

யாழில் நேற்று சமகால நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும். இந்த அரசாங்கத்திற்கு எதிராக நாங்கள் வீதியில் இறங்குவோம்.

இந்த வருடம் மூன்றாவது முறையும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண மின்சார பாவனையாளர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

கிராமப்புறங்களில் வாழும் மக்கள் இதனால் வெகுவாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் மின்சார கட்டணத்தை குறைக்கும் பொழுது 5 சதவீதம் 10 சதவீதம் என குறைத்து விட்டு அதிகரிக்கும் பொழுது 20 சதவீதம் மற்றும் 25 சதவீதம் என அதிகரிக்கின்றது.

அதேபோல் நீர் கட்டணமும் அதிகரிக்கப்பட்டது. சாதாரண அடிப்படை வசதி இல்லாத மக்கள் கூட இந்த மின்சார கட்டணத்தில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மின்சார கட்டணம் அதிகரித்தால் பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.

இந்த அரசாங்கத்தால் மக்களுக்கு எந்தவித பலனும் இல்லை, இந்த அரசாங்கம் மக்களை மீண்டும் மீண்டும் பாரிய குழிக்குள் தள்ளுகின்றது. மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது.  – என்றார்.


அரசுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டங்கள் – தேசிய மக்கள் சக்தி விடுத்துள்ள எச்சரிக்கை samugammedia  ராஜபக்ச அரசாங்கத்தினர் எவ்வாறு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்களோ அதுபோல் ரணிலும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார் என தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர், எதிர்வரும் நாட்களில் இந்த அரசாங்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம் என்றார்.யாழில் நேற்று சமகால நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.ரணில் விக்ரமசிங்க ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும். இந்த அரசாங்கத்திற்கு எதிராக நாங்கள் வீதியில் இறங்குவோம்.இந்த வருடம் மூன்றாவது முறையும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண மின்சார பாவனையாளர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.கிராமப்புறங்களில் வாழும் மக்கள் இதனால் வெகுவாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் மின்சார கட்டணத்தை குறைக்கும் பொழுது 5 சதவீதம் 10 சதவீதம் என குறைத்து விட்டு அதிகரிக்கும் பொழுது 20 சதவீதம் மற்றும் 25 சதவீதம் என அதிகரிக்கின்றது.அதேபோல் நீர் கட்டணமும் அதிகரிக்கப்பட்டது. சாதாரண அடிப்படை வசதி இல்லாத மக்கள் கூட இந்த மின்சார கட்டணத்தில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மின்சார கட்டணம் அதிகரித்தால் பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.இந்த அரசாங்கத்தால் மக்களுக்கு எந்தவித பலனும் இல்லை, இந்த அரசாங்கம் மக்களை மீண்டும் மீண்டும் பாரிய குழிக்குள் தள்ளுகின்றது. மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது.  – என்றார்.

Advertisement

Advertisement

Advertisement