• May 03 2024

தாதிய வெற்றிடங்கள்...! திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் தமிழ் மாணவர்கள்...!சபையில் சிறிதரன் குற்றச்சாட்டு...!samugammedia

Sharmi / Sep 8th 2023, 1:26 pm
image

Advertisement

நீண்ட காலமாக தாதிய வெற்றிடங்களுக்கு சி்ங்கள மாணவர்கள் மட்டுமே சட்டத் திருத்தங்களுடன் உள்வாங்கப்படுவதுடன் தமிழ் மாணவர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பாராளுமன்றில் குற்றச்சாட்டியுள்ளார்.

இன்றையதினம் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நிலவும் சுகாதாரத்துறையின் பிரச்சினைகள் , தற்கொலைகள் மற்றும் பொருளதாரப் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை புள்ளி விபரங்களுடன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு நாட்டினுடைய மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சுகாதாரம் அடிப்படை மனித உரிமையாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

வெளிநாடுகளில் அடிப்படை மனித உரிமையாகக் காணப்படும் சுகாதாரம் இலங்கையில் வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது.

அமைச்சருக்கும்  அவரோடு இணைந்தவர்களுக்கும் வருமானம் தருகின்ற துறையாகக் காணப்படுவதோடு  சில வைத்திய சங்கங்களும் தங்களுடைய முகவர்களூடாக  மருத்துப் பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் முகவர்களாகச் செயற்படுகின்றார்களே தவிர நீதியான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

ஒட்டுமொத்தமாக பகல் கொள்ளையடிக்கும் மாபியாக்களின் மையப்  பிரதேசமாக சுகாதாரத்துறை மாறியுள்ளது. 

பேராதனை மருத்துவக் கல்லூரி , யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துக் கல்லூரி , மட்டக்களப்பு பல்லைககழக மருத்துவக் கல்லூரி  உட்பட ஏனையவற்றிலிருந்து வெளியேறும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களில் எத்தனை பேர் இங்கு பணி புரிகின்றார்கள் என்ற கேள்வி காணப்படுகின்றது.

இவற்றில்  நீண்ட காலமாக சிங்கள மாணவர்கள் மட்டுமே சட்டத் திருத்தங்களோடு உள்வாங்கப்படுவதுடன்  தமிழ்த் தாதியர்கள் திட்டமிட்டுத் தவிர்க்கப்படுகின்றனர்.

இதனால் வடகிழக்கில் அனேகமான வைத்தியசாகைளில் தாதியர்களற்ற துப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

கிளிநொச்சி வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கு நாளாந்தம் 420 க்கு மேற்பட்டவர்களும் சிகிச்சைகளுக்காக ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும் வருகை தருகின்றனர்.  ஆனால் அங்கு தொழில்நுட்ப சாதனங்களின் பற்றாக்குறையும் வைத்தியர்களின் பற்றாக்குறையும் நிலவுகின்றது.

இதேவேளை  மன்னர்களின் ஓலைச் சுவடிகளை ஆதாரமாக லைத்து இலங்கையில் ஆயுள்வேதம் என்பதை அறிமுகம் செய்த  யாழ்ப்பாணத்தில் காணப்படும்  நூறு வருடம் பழமை வாய்ந்த லங்கா ஆயுள்வேதக் வைத்தியக் கல்லூரி தற்சமயம் மூடப்படும் நிலையிலுள்ளது.   பொறுப்பு வாய்ந்த சுகாதார அமைச்சர் நடைபெறும் விடயங்களுக்குப் பதிலளிக்க முடியாமல் காணப்படுவதால் அவர் அமைச்சுப் பதவியிலிருந்து அகற்றப்படவேண்டியலர். எனத் தெரிவித்தார்.

தாதிய வெற்றிடங்கள். திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் தமிழ் மாணவர்கள்.சபையில் சிறிதரன் குற்றச்சாட்டு.samugammedia நீண்ட காலமாக தாதிய வெற்றிடங்களுக்கு சி்ங்கள மாணவர்கள் மட்டுமே சட்டத் திருத்தங்களுடன் உள்வாங்கப்படுவதுடன் தமிழ் மாணவர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பாராளுமன்றில் குற்றச்சாட்டியுள்ளார்.இன்றையதினம் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் நிலவும் சுகாதாரத்துறையின் பிரச்சினைகள் , தற்கொலைகள் மற்றும் பொருளதாரப் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை புள்ளி விபரங்களுடன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.ஒரு நாட்டினுடைய மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சுகாதாரம் அடிப்படை மனித உரிமையாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது. வெளிநாடுகளில் அடிப்படை மனித உரிமையாகக் காணப்படும் சுகாதாரம் இலங்கையில் வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது. அமைச்சருக்கும்  அவரோடு இணைந்தவர்களுக்கும் வருமானம் தருகின்ற துறையாகக் காணப்படுவதோடு  சில வைத்திய சங்கங்களும் தங்களுடைய முகவர்களூடாக  மருத்துப் பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் முகவர்களாகச் செயற்படுகின்றார்களே தவிர நீதியான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.ஒட்டுமொத்தமாக பகல் கொள்ளையடிக்கும் மாபியாக்களின் மையப்  பிரதேசமாக சுகாதாரத்துறை மாறியுள்ளது.  பேராதனை மருத்துவக் கல்லூரி , யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துக் கல்லூரி , மட்டக்களப்பு பல்லைககழக மருத்துவக் கல்லூரி  உட்பட ஏனையவற்றிலிருந்து வெளியேறும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களில் எத்தனை பேர் இங்கு பணி புரிகின்றார்கள் என்ற கேள்வி காணப்படுகின்றது. இவற்றில்  நீண்ட காலமாக சிங்கள மாணவர்கள் மட்டுமே சட்டத் திருத்தங்களோடு உள்வாங்கப்படுவதுடன்  தமிழ்த் தாதியர்கள் திட்டமிட்டுத் தவிர்க்கப்படுகின்றனர். இதனால் வடகிழக்கில் அனேகமான வைத்தியசாகைளில் தாதியர்களற்ற துப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.கிளிநொச்சி வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கு நாளாந்தம் 420 க்கு மேற்பட்டவர்களும் சிகிச்சைகளுக்காக ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும் வருகை தருகின்றனர்.  ஆனால் அங்கு தொழில்நுட்ப சாதனங்களின் பற்றாக்குறையும் வைத்தியர்களின் பற்றாக்குறையும் நிலவுகின்றது. இதேவேளை  மன்னர்களின் ஓலைச் சுவடிகளை ஆதாரமாக லைத்து இலங்கையில் ஆயுள்வேதம் என்பதை அறிமுகம் செய்த  யாழ்ப்பாணத்தில் காணப்படும்  நூறு வருடம் பழமை வாய்ந்த லங்கா ஆயுள்வேதக் வைத்தியக் கல்லூரி தற்சமயம் மூடப்படும் நிலையிலுள்ளது.   பொறுப்பு வாய்ந்த சுகாதார அமைச்சர் நடைபெறும் விடயங்களுக்குப் பதிலளிக்க முடியாமல் காணப்படுவதால் அவர் அமைச்சுப் பதவியிலிருந்து அகற்றப்படவேண்டியலர். எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement