• May 06 2024

ஏப்ரல் 21 தாக்குதலுக்கான பொறுப்பை மைத்திரிபாலவே ஏற்க வேண்டும்! டயனா கமகே samugammedia

Chithra / Sep 8th 2023, 1:33 pm
image

Advertisement

 

 ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான முழுமையான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டுமென சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். 

நிகழ்ச்சி ஒன்றறில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இந்தியாவும் புலனாய்வு பிரிவினரும் தகவல்களை வழங்கிய போதிலும் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் எதற்காக விசாரணை நடத்தப்படவில்லை என்ற கேள்வி எழுகின்றது. 

அத்துடன், குறித்த சந்தர்ப்பத்தில் தமது பொறுப்புக்களை தமக்கு பதிலாக மற்றுமொருவரிடம் கையளிக்காது நாட்டின் ஜனாதிபதி வெளிநாட்டிற்கு செல்கிறார். 

இதனடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது பொறுப்புக்களில் இருந்து விலகியுள்ளமை தெளிவாகுவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குற்றம்சாட்டியுள்ளார்.


ஏப்ரல் 21 தாக்குதலுக்கான பொறுப்பை மைத்திரிபாலவே ஏற்க வேண்டும் டயனா கமகே samugammedia   ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான முழுமையான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டுமென சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றறில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இந்தியாவும் புலனாய்வு பிரிவினரும் தகவல்களை வழங்கிய போதிலும் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் எதற்காக விசாரணை நடத்தப்படவில்லை என்ற கேள்வி எழுகின்றது. அத்துடன், குறித்த சந்தர்ப்பத்தில் தமது பொறுப்புக்களை தமக்கு பதிலாக மற்றுமொருவரிடம் கையளிக்காது நாட்டின் ஜனாதிபதி வெளிநாட்டிற்கு செல்கிறார். இதனடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது பொறுப்புக்களில் இருந்து விலகியுள்ளமை தெளிவாகுவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement