• Nov 22 2024

மாத்தளை பெர்னாட் அலுவிஹாரே விளையாட்டரங்கம் பொதுமக்களிடம் கையளிப்பு..!samugammedia

Tharun / Feb 29th 2024, 6:52 pm
image

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில் புனரமைக்கப்பட்ட மாத்தளை பெர்னாட் அலுவிஹாரே விளையாட்டரங்கம் நேற்று (28)  பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.


குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் 47.50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த மைதானம் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.


இதன் ஆரம்ப நிகழ்வில் உள்ளூர் பாடசாலை மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆசிரியர்களின் அணிவகுப்பு, உள்ளூர் பாடசாலை விளையாட்டு வீரர்கள் பங்குபற்றிய ஓட்டப் போட்டி மற்றும் கண்கவர் கலப்பு தற்காப்புக் கலை காட்சிகள் இடம்பெற்றன. இங்கு திறமைகளை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.


இதேவேளை, மாத்தளை நந்திமித்ர ஏகநாயக்க செயற்கை ஹொக்கி மைதானத்தை நவீனமயமாக்குவதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.


இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஷெமல் பெர்னாண்டோ, மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் நாலக கோட்டேகொட, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, மாத்தளை மாவட்ட செயலாளர் திருமதி தேஜானி திலகரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.


மாத்தளை பெர்னாட் அலுவிஹாரே விளையாட்டரங்கம் பொதுமக்களிடம் கையளிப்பு.samugammedia இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில் புனரமைக்கப்பட்ட மாத்தளை பெர்னாட் அலுவிஹாரே விளையாட்டரங்கம் நேற்று (28)  பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் 47.50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த மைதானம் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.இதன் ஆரம்ப நிகழ்வில் உள்ளூர் பாடசாலை மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆசிரியர்களின் அணிவகுப்பு, உள்ளூர் பாடசாலை விளையாட்டு வீரர்கள் பங்குபற்றிய ஓட்டப் போட்டி மற்றும் கண்கவர் கலப்பு தற்காப்புக் கலை காட்சிகள் இடம்பெற்றன. இங்கு திறமைகளை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.இதேவேளை, மாத்தளை நந்திமித்ர ஏகநாயக்க செயற்கை ஹொக்கி மைதானத்தை நவீனமயமாக்குவதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஷெமல் பெர்னாண்டோ, மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் நாலக கோட்டேகொட, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, மாத்தளை மாவட்ட செயலாளர் திருமதி தேஜானி திலகரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement