ஏன் ஆவி பிடிக்கவேண்டும்? எப்படி பிடிக்கவேண்டும்?

398

இன்றைய கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த காலத்தில் ஆவி பிடித்தல் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.

ஆவி பிடிப்பதனால் சுவாசப் பாதையிலுள்ள நுண் கிருமிகள் அழிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

ஆவி பிடிப்பதற்கு தேவையான மூலிகைகள் எலுமிச்சை/தோடை, துளசி, ஆடாதோடை, நொச்சி, மரமஞ்சல், இஞ்சி, ஏலக்காய், Eucalyptus oil ஆகியனவாகும்.

மேற்கூறியவற்றின் ஏதாவது ஒன்றை அல்லது இரண்டை நீர் கொதிக்கும் போது பரிந்துரைக்கப்பட்ட அளவு இட்டு 5-10 நிமிடங்களிற்கு மூக்கு வழியாகவும் வாய் வழியாகவும் சுவாசத்தை உள்வாங்கி வெளிவிடவேண்டும்.

இதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் எவையெனில், தொண்டை மற்றும் மூக்கின் உள்பகுதியின் காய்ந்த தன்மை மற்றும் வீக்கத்தை குறைக்கும். நுரையீரலின் உள்பகுதியின் சீதம், வீக்கத்தை குறைப்பதால் இலகுவான சுவாசத்துக்கு உதவும்.

தொண்டையின் தசைகளை இளக்கி இருமலை குறைப்பதுடன் குறிப்பிட்டளவு நுண்ணுயிர் வைரசுகளை அழித்து காய்ச்சல், தடிமன், தலைபாரம், மூக்கடைப்பு ஆகியவற்றை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் மனிதர்களின் சுவாசத்தொகுதியை பலப்படுத்தும் ஆற்றலும் இந்த மூலிகை ஆவி பிடித்தலில் இருப்பதாக சொல்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: