• Mar 12 2025

அரச வைத்திசாலைகளுக்கு தட்டுப்பாடின்றி மருந்துகள் விநியோகிக்கப்படும் - சுகாதார அமைச்சர் நடவடிக்கை

Chithra / Mar 11th 2025, 9:17 am
image

 

அரச வைத்தியசாலைகளுக்கு எவ்வித தட்டுப்பாடுமின்றி மருந்துகளை தொடர்ச்சியாக வழங்க உள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் மருந்து விநியோகம் தொடர்பில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சுகாதார மற்றும் மருந்து விநியோகம் என்பன இந்நாட்டு மக்களின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடைய துறைகளாக உள்ளன. ஆகையால் அவற்றுக்கு மாற்று வழிகள் எதுவும் இல்லை. 

இத்துறைகளில் கடமையாற்றுபவர்களின் பொறுப்புணர்வு, ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மை ஆகியவை அத்துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

சுகாதாரம் மற்றும் மருந்துத் துறைகளில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயற்பாடு தொடர்பிலும் தொடர்ச்சியாக கண்காணிப்பதுடன், அதன் விளைவுகள் தொடர்பில் ஆராய்வதும் அவசியமானதாகும்.

இதன் மூலம் மருந்து விநியோகச் சங்கிலியை தொடர்ச்சியாக பராமரிக்க முடியும். சுகாதாரத் துறையில் பணிபுரியும் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். 

சில சூழ்நிலைகளில் சவலான நிலைமைகளையும் நாம் சந்திக்க நேரிடலாம். மருந்துத் துறையில் நிலவிவரும் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க தற்போதைய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

அத்தோடு எதிர்வரும் காலங்களில் அரச வைத்தியசாலைகளுக்கு எவ்வித தட்டுப்பாடுமின்றி மருந்துகளை தொடர்ச்சியாக வழங்க சுகாதார அமைச்சும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.  என்றார்.

அரச வைத்திசாலைகளுக்கு தட்டுப்பாடின்றி மருந்துகள் விநியோகிக்கப்படும் - சுகாதார அமைச்சர் நடவடிக்கை  அரச வைத்தியசாலைகளுக்கு எவ்வித தட்டுப்பாடுமின்றி மருந்துகளை தொடர்ச்சியாக வழங்க உள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.சுகாதார அமைச்சில் மருந்து விநியோகம் தொடர்பில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.சுகாதார மற்றும் மருந்து விநியோகம் என்பன இந்நாட்டு மக்களின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடைய துறைகளாக உள்ளன. ஆகையால் அவற்றுக்கு மாற்று வழிகள் எதுவும் இல்லை. இத்துறைகளில் கடமையாற்றுபவர்களின் பொறுப்புணர்வு, ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மை ஆகியவை அத்துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சுகாதாரம் மற்றும் மருந்துத் துறைகளில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயற்பாடு தொடர்பிலும் தொடர்ச்சியாக கண்காணிப்பதுடன், அதன் விளைவுகள் தொடர்பில் ஆராய்வதும் அவசியமானதாகும்.இதன் மூலம் மருந்து விநியோகச் சங்கிலியை தொடர்ச்சியாக பராமரிக்க முடியும். சுகாதாரத் துறையில் பணிபுரியும் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். சில சூழ்நிலைகளில் சவலான நிலைமைகளையும் நாம் சந்திக்க நேரிடலாம். மருந்துத் துறையில் நிலவிவரும் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க தற்போதைய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.அத்தோடு எதிர்வரும் காலங்களில் அரச வைத்தியசாலைகளுக்கு எவ்வித தட்டுப்பாடுமின்றி மருந்துகளை தொடர்ச்சியாக வழங்க சுகாதார அமைச்சும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.  என்றார்.

Advertisement

Advertisement

Advertisement