• May 19 2024

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் - தேசிய மக்கள் சக்திக்கு இடையில் சந்திப்பு

Chithra / Apr 1st 2024, 2:38 pm
image

Advertisement


ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையில் இன்று (01) முற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தமது செயற்றிட்டங்கள் பற்றி தேசிய மக்கள் சக்திக்கு தெளிவுப்படுத்திய ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதிகள், நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியினால் உக்கிரமடைந்துள்ள வறுமை உள்ளிட்ட சமூக பொருளாதார பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்தியதுடன், அவர்களது அறிக்கையில் இதுகுறித்த தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

இந்தச் சந்திப்பின் போது குறித்த செயற்றிட்டத்துக்கான இலங்கை வதிவிட பிரதிநிதி அஸுசா குபோடா  (Azusa Kubota), கொள்கை நிபுணரான சந்திரிக்கா கருணாரத்ன, ஊடக நிபுணர் சத்துரங்க ஹபுஆரச்சி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் - தேசிய மக்கள் சக்திக்கு இடையில் சந்திப்பு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையில் இன்று (01) முற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.இதன்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தமது செயற்றிட்டங்கள் பற்றி தேசிய மக்கள் சக்திக்கு தெளிவுப்படுத்திய ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதிகள், நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியினால் உக்கிரமடைந்துள்ள வறுமை உள்ளிட்ட சமூக பொருளாதார பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்தியதுடன், அவர்களது அறிக்கையில் இதுகுறித்த தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.இந்தச் சந்திப்பின் போது குறித்த செயற்றிட்டத்துக்கான இலங்கை வதிவிட பிரதிநிதி அஸுசா குபோடா  (Azusa Kubota), கொள்கை நிபுணரான சந்திரிக்கா கருணாரத்ன, ஊடக நிபுணர் சத்துரங்க ஹபுஆரச்சி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement