• Nov 23 2024

புத்தளத்தை புரட்டிப் போட்ட மினி சூறாவளி – 636 பேர் பாதிப்பு

Chithra / Aug 18th 2024, 3:17 pm
image

 


புத்தளம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு (16) கடும் மழையுடனான மினி சூறாவளி காற்றினால் 145 குடும்பங்களைச் சேர்ந்த 636 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையினையடுத்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு (16) 10.30 மணியளவில் திடீரென இடியுடன் கடும் மழைபெய்ததுடன், மினி சூறாவளி காற்றும் வீசியுள்ளது. 

இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக புத்தளத்தில் அனைத்து பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது.

மினி சூறாவளி காற்று காரணமாக பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியில் இருந்த பல மரங்கள் முறிந்து வீழ்ந்தன. 

பாலாவி , கரம்பை பகுதியில் பிரதான வீதியோரத்தில் நின்ற பெரிய மரமொன்று முறிந்து பிரதான வீதியின் நடுவே வீழ்ந்ததில் அவ்வீதியுடனான போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இதேவேளை, புத்தளம் நகர சபைக்கு சொந்தமான மீன் சந்தைக் கட்டிடம் மற்றும் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த மண்டபம் என்பனவற்றின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு கடும் மழையுடனான மினி சூறாவளி காற்றினால் புத்தளம் மாவட்டத்தில ஏழு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 26 கிராம சேவகர் பிரிவுகளில் வசித்துவரும் 145 குடும்பங்களைச் சேர்ந்த 636 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

புத்தளம் மாவட்டத்தின் ஆராச்சிக்கட்டுவ, புத்தளம், முந்தல், கற்பிட்டி, வன்னாத்தவில்லு, சிலாபம், மஹாவௌ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 26 கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மினி சூறாவளி காற்று காரணமாக இருவர் காயமடைந்துள்ளதுடன், மேற்படி ஏழு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 144 வீடுகளும், 12 வர்த்தக நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

மினி சூறாவளி காரணமாக புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதுடன், அங்கு 109 குடும்பங்களைச் சேர்ந்த 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 109 வீடுகளும், 11 வர்த்தக நிலையங்களும் சேதமடைந்துள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரி மேலும் கூறினார்.

புத்தளத்தை புரட்டிப் போட்ட மினி சூறாவளி – 636 பேர் பாதிப்பு  புத்தளம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு (16) கடும் மழையுடனான மினி சூறாவளி காற்றினால் 145 குடும்பங்களைச் சேர்ந்த 636 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.சீரற்ற காலநிலையினையடுத்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு (16) 10.30 மணியளவில் திடீரென இடியுடன் கடும் மழைபெய்ததுடன், மினி சூறாவளி காற்றும் வீசியுள்ளது. இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக புத்தளத்தில் அனைத்து பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது.மினி சூறாவளி காற்று காரணமாக பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியில் இருந்த பல மரங்கள் முறிந்து வீழ்ந்தன. பாலாவி , கரம்பை பகுதியில் பிரதான வீதியோரத்தில் நின்ற பெரிய மரமொன்று முறிந்து பிரதான வீதியின் நடுவே வீழ்ந்ததில் அவ்வீதியுடனான போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.இதேவேளை, புத்தளம் நகர சபைக்கு சொந்தமான மீன் சந்தைக் கட்டிடம் மற்றும் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த மண்டபம் என்பனவற்றின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.இவ்வாறு கடும் மழையுடனான மினி சூறாவளி காற்றினால் புத்தளம் மாவட்டத்தில ஏழு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 26 கிராம சேவகர் பிரிவுகளில் வசித்துவரும் 145 குடும்பங்களைச் சேர்ந்த 636 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.புத்தளம் மாவட்டத்தின் ஆராச்சிக்கட்டுவ, புத்தளம், முந்தல், கற்பிட்டி, வன்னாத்தவில்லு, சிலாபம், மஹாவௌ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 26 கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், மினி சூறாவளி காற்று காரணமாக இருவர் காயமடைந்துள்ளதுடன், மேற்படி ஏழு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 144 வீடுகளும், 12 வர்த்தக நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.மினி சூறாவளி காரணமாக புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதுடன், அங்கு 109 குடும்பங்களைச் சேர்ந்த 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 109 வீடுகளும், 11 வர்த்தக நிலையங்களும் சேதமடைந்துள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரி மேலும் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement