• Oct 30 2024

அமைச்சர் பந்துல குணவர்தன திருமலைக்கு திடீர் விஜயம்...!

Sharmi / Jul 13th 2024, 9:14 am
image

Advertisement

வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன  நேற்றையதினம்(13)  திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான மக்கள் சந்திப்பு வேலைத்திட்டத்தின் கீழ், நேற்றையதினம்(12) திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கூட்டமொன்று இடம்பெற்றது. 

இதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது, வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன். இலங்கை போக்குவரத்து சபையின் திருகோணமலை சாலைக்கு சென்று அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். 

இதில் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரள, அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



அமைச்சர் பந்துல குணவர்தன திருமலைக்கு திடீர் விஜயம். வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன  நேற்றையதினம்(13)  திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான மக்கள் சந்திப்பு வேலைத்திட்டத்தின் கீழ், நேற்றையதினம்(12) திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கூட்டமொன்று இடம்பெற்றது. இதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.இதன்போது, வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன். இலங்கை போக்குவரத்து சபையின் திருகோணமலை சாலைக்கு சென்று அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதில் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரள, அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement