• Sep 17 2024

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ராஜதந்திரமே வெற்றி பெறுகிறது! ஈபிடிபி வேட்பாளர் பெருமிதம்

Chithra / Jan 21st 2023, 12:08 pm
image

Advertisement

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உழைப்பும் ராஜதந்திரமுமே வெற்றியளித்துக்கொண்டிருக்கிறது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் முருகேசு வை. தவநாதன் தெரிவித்துள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சி  கிளிநொச்சி மாவட்ட  செயலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் இதன்போது தாக்கல் செய்யப்பட்ட அதேவேளை,  ஜனநாயகக் கட்சியின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் முருகேசு வை. தவநாதன் தலைமையில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது, ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் முருகேசு வை. தவநாதன், 

"இந்த தேர்தலில் அரசியல் களம் என்பது மாறி வருகின்ற காரணத்தினாலும், தொடர்ந்தும் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிற அரசியற் கட்சிகளும் குழுக்களும், மீண்டும் ஒருமுறை மக்களை ஏமாற்றுகிறார்கள்.

கடந்த தேர்தலில் கூட்டு என வாக்கு சேகரித்தார்கள், தற்போது பிரிந்து நின்று வாக்கு சேகரிக்கிறார்கள். தேர்தலுக்கு பின்னர் என்ன செய்வார்களோ என மக்களுக்குத் தெரியாது.

ஆகவே மக்கள் மிகவும் விழிப்படைந்த ஒரு சூழலிலே, மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்கிற போலியான கட்சிகளை நிராகரித்து, மாகாண சபைகள் முறைதான் தமிழ் மக்களுக்கு தீர்வாக அமையும் என்பதை 30 வருடங்களாக தொடர்ந்து தளம்பல் இல்லாமல், வலியுறுத்தி வரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினதும், அதன் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உழைப்பும் தீர்க்கதரிசனமும், ராஜதந்திரமுமே வெற்றியளித்துக்கொண்டிருக்கிறது.

நேற்றைய தினம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் வேண்டுகோளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவும் ஒன்றாகவே இருந்தது. அதுவே எமது வெற்றி என்று நினைக்கிறேன். அது பாதி வெற்றியாக இருக்கிறது. மிகுதி வெற்றியினை பெற மக்கள் போலிகளை இனம் கண்டு, அவர்களை நிராகரித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் அதன் சின்னமான வீணை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.' எனத் தெரிவித்திருந்தார். 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ராஜதந்திரமே வெற்றி பெறுகிறது ஈபிடிபி வேட்பாளர் பெருமிதம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உழைப்பும் ராஜதந்திரமுமே வெற்றியளித்துக்கொண்டிருக்கிறது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் முருகேசு வை. தவநாதன் தெரிவித்துள்ளார்.ஈழமக்கள் ஜனநாயக கட்சி  கிளிநொச்சி மாவட்ட  செயலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.அதன்படி கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் இதன்போது தாக்கல் செய்யப்பட்ட அதேவேளை,  ஜனநாயகக் கட்சியின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் முருகேசு வை. தவநாதன் தலைமையில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது.இதன்போது, ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் முருகேசு வை. தவநாதன், "இந்த தேர்தலில் அரசியல் களம் என்பது மாறி வருகின்ற காரணத்தினாலும், தொடர்ந்தும் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிற அரசியற் கட்சிகளும் குழுக்களும், மீண்டும் ஒருமுறை மக்களை ஏமாற்றுகிறார்கள்.கடந்த தேர்தலில் கூட்டு என வாக்கு சேகரித்தார்கள், தற்போது பிரிந்து நின்று வாக்கு சேகரிக்கிறார்கள். தேர்தலுக்கு பின்னர் என்ன செய்வார்களோ என மக்களுக்குத் தெரியாது.ஆகவே மக்கள் மிகவும் விழிப்படைந்த ஒரு சூழலிலே, மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்கிற போலியான கட்சிகளை நிராகரித்து, மாகாண சபைகள் முறைதான் தமிழ் மக்களுக்கு தீர்வாக அமையும் என்பதை 30 வருடங்களாக தொடர்ந்து தளம்பல் இல்லாமல், வலியுறுத்தி வரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினதும், அதன் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உழைப்பும் தீர்க்கதரிசனமும், ராஜதந்திரமுமே வெற்றியளித்துக்கொண்டிருக்கிறது.நேற்றைய தினம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் வேண்டுகோளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவும் ஒன்றாகவே இருந்தது. அதுவே எமது வெற்றி என்று நினைக்கிறேன். அது பாதி வெற்றியாக இருக்கிறது. மிகுதி வெற்றியினை பெற மக்கள் போலிகளை இனம் கண்டு, அவர்களை நிராகரித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் அதன் சின்னமான வீணை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.' எனத் தெரிவித்திருந்தார். 

Advertisement

Advertisement

Advertisement