• May 18 2024

50 வருடமாக டீ மட்டுமே குடித்து உயிர் வாழும் மூதாட்டி!

Tea
Sharmi / Jan 21st 2023, 12:09 pm
image

Advertisement

உலகில் தினமும் பல்வேறு பட்ட விநோத சம்பவங்கள் பதிவாகி வருகின்றது. அந்த வகையில் 50 வருடங்களுக்கும் மேலாக டீ மட்டுமே குடித்து மூதாட்டி ஒருவர் வாழும் சம்பவம் அணைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்கு வங்கம், பெல்திகா என்ற கிராமத்தில் வசித்து வரும் பெண் அனிமா சக்ரபூர்த்தி. இவர் கடந்த 50 ஆண்டுகளாக திட உணவுகளை உட்கொள்வதே இல்லையாம்.

வெறும் டீ மற்றும் ஹெல்த் டிரிங்க்ஸ் என நீர் ஆகாரங்களை மட்டுமே குடித்து வாழ்ந்து வருகிறார்.

இது குறித்து அவரது மகன் கூறியதாவது, "நாங்கள் முன்பு ஏழ்மை நிலையில் இருக்கிறோம். அப்போது வீட்டு வேலைகளுக்கு எங்கள் அம்மா செல்வதுண்டு. அங்கு கிடைக்கும் உணவுகளை எங்களுக்கு தந்து விட்டு வெறும் தண்ணீர், டீ, ஜூஸ் ஆகியவற்றை மட்டுமே எங்கள் அம்மா குடித்து வாழ்க்கையை கழிப்பார்.

இந்தப் பழக்கம் நாளடைவில் அவருக்கு அப்படியே தொடர்ந்து விட்டது" எனத் தெரிவித்தார். 76 வயதிலும் ஆரோக்கியமாக இந்தப் பெண் இருப்பது குறித்து மருத்துவர், நமது உடல் இயக்கத்திற்கும் உயிர் வாழ்வதற்கும் கலோரிகள், ஊட்டச்சத்துக்கள் தேவை.

அது உணவாக மட்டுமே இருக்க வேண்டும் என்று இல்லை. நீர் ஆகாரமாக கூட இருக்கலாம். எந்த வகையில் சாப்பிடுகிறோம் என்பதை விட அதில் ஊட்டச்சத்து உள்ளதா என்பதுதான் முக்கியம். நீண்ட நாள் படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகளுக்கு திரவ உணவுகளே கொடுக்கப்படுகிறது எனத் தெரிவித்தனர்.   





50 வருடமாக டீ மட்டுமே குடித்து உயிர் வாழும் மூதாட்டி உலகில் தினமும் பல்வேறு பட்ட விநோத சம்பவங்கள் பதிவாகி வருகின்றது. அந்த வகையில் 50 வருடங்களுக்கும் மேலாக டீ மட்டுமே குடித்து மூதாட்டி ஒருவர் வாழும் சம்பவம் அணைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மேற்கு வங்கம், பெல்திகா என்ற கிராமத்தில் வசித்து வரும் பெண் அனிமா சக்ரபூர்த்தி. இவர் கடந்த 50 ஆண்டுகளாக திட உணவுகளை உட்கொள்வதே இல்லையாம். வெறும் டீ மற்றும் ஹெல்த் டிரிங்க்ஸ் என நீர் ஆகாரங்களை மட்டுமே குடித்து வாழ்ந்து வருகிறார்.இது குறித்து அவரது மகன் கூறியதாவது, "நாங்கள் முன்பு ஏழ்மை நிலையில் இருக்கிறோம். அப்போது வீட்டு வேலைகளுக்கு எங்கள் அம்மா செல்வதுண்டு. அங்கு கிடைக்கும் உணவுகளை எங்களுக்கு தந்து விட்டு வெறும் தண்ணீர், டீ, ஜூஸ் ஆகியவற்றை மட்டுமே எங்கள் அம்மா குடித்து வாழ்க்கையை கழிப்பார்.இந்தப் பழக்கம் நாளடைவில் அவருக்கு அப்படியே தொடர்ந்து விட்டது" எனத் தெரிவித்தார். 76 வயதிலும் ஆரோக்கியமாக இந்தப் பெண் இருப்பது குறித்து மருத்துவர், நமது உடல் இயக்கத்திற்கும் உயிர் வாழ்வதற்கும் கலோரிகள், ஊட்டச்சத்துக்கள் தேவை.அது உணவாக மட்டுமே இருக்க வேண்டும் என்று இல்லை. நீர் ஆகாரமாக கூட இருக்கலாம். எந்த வகையில் சாப்பிடுகிறோம் என்பதை விட அதில் ஊட்டச்சத்து உள்ளதா என்பதுதான் முக்கியம். நீண்ட நாள் படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகளுக்கு திரவ உணவுகளே கொடுக்கப்படுகிறது எனத் தெரிவித்தனர்.   

Advertisement

Advertisement

Advertisement