• Apr 28 2024

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

harsha / Dec 14th 2022, 12:49 pm
image

Advertisement

சந்தையில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளிச் சந்தையின் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ​​நவம்பர் மாதம் வரை விலைக் குறைப்பு மூலம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜூலை மாதம் வெளிச்சந்தையில் ஒரு கிலோகிராம் பருப்பு ரூ.595 ஆக இருந்தது, டிசம்பரில் லங்கா சதொச மூலம் ஒரு கிலோகிராம் பருப்பு ரூ.389 ஆக குறைந்துள்ளது.

வெளிச்சந்தையில் 410 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் கோதுமை மா டிசம்பர் மாதத்தில் லங்கா சதொச விற்பனை நிலையங்களில் 265 ரூபாவாக குறைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

280 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலையை 229 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலையை 225 ரூபாவிலிருந்து 198 ரூபாவாக குறைக்க சதொச நிறுவனத்தால் முடிந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக சந்தை கண்காணிப்பு மற்றும் ஆய்வுகளைத் தொடருமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் அளவீட்டு அலகுகள் தரநிலைகள் மற்றும் சேவைகள் திணைக்களத்திற்கு அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

மேலும், நியாயமான சந்தை அமைப்பை நிறுவும் நோக்கத்துடன் 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் சட்டம் திருத்தப்படும் என்றார்.

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு சந்தையில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளிச் சந்தையின் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ​​நவம்பர் மாதம் வரை விலைக் குறைப்பு மூலம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, ஜூலை மாதம் வெளிச்சந்தையில் ஒரு கிலோகிராம் பருப்பு ரூ.595 ஆக இருந்தது, டிசம்பரில் லங்கா சதொச மூலம் ஒரு கிலோகிராம் பருப்பு ரூ.389 ஆக குறைந்துள்ளது.வெளிச்சந்தையில் 410 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் கோதுமை மா டிசம்பர் மாதத்தில் லங்கா சதொச விற்பனை நிலையங்களில் 265 ரூபாவாக குறைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.280 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலையை 229 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலையை 225 ரூபாவிலிருந்து 198 ரூபாவாக குறைக்க சதொச நிறுவனத்தால் முடிந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக சந்தை கண்காணிப்பு மற்றும் ஆய்வுகளைத் தொடருமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் அளவீட்டு அலகுகள் தரநிலைகள் மற்றும் சேவைகள் திணைக்களத்திற்கு அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.மேலும், நியாயமான சந்தை அமைப்பை நிறுவும் நோக்கத்துடன் 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் சட்டம் திருத்தப்படும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement