• May 19 2024

நிபா வைரஸ் குறித்து இலங்கையர்களுக்கு சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு! samugammedia

Chithra / Sep 22nd 2023, 8:21 am
image

Advertisement


இந்தியா உட்பட பல நாடுகளில் பதிவாகியுள்ள ‘நிபா’ வைரஸைக் கண்டறியும் சிறப்புப் பரிசோதனைக் கருவிகளை கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எந்தவொரு இடர் நிலைமையையும் எதிர்கொள்ளும் வகையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையுடன் நிபா வைரஸைக் கண்டறிவதற்குத் தேவையான விசேட பரிசோதனைக் கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் அவை இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த வைரஸ் தொடர்பிலான விசேட வைத்தியர் ஜானகி அபேநாயக்க இந்த வைரஸ் தொடர்பில் தெரிவிக்கையில், 

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உலகளாவிய ரீதியில் குறிப்பிட்ட சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் தயாரிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

தற்போதைய விஞ்ஞான தரவுகளின்படி இந்த நோய் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடியது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் இலங்கையர்கள் நன்கு அறிவுடனும் கவனத்துடனும் இருப்பது மிகவும் அவசியமானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட நபரின் உடல் திரவங்கள் மற்றும் சிறுநீர் மூலம் நிபா பரவுகிறது, மேலும் இந்த நோய் பெரும்பாலும் நோயாளியுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு பரவுகிறது.

எவ்வாறாயினும், நிபா வைரஸ் பரவுவது மிகவும் மெதுவாக இருப்பதால், நாடுகளுக்கு இடையில் பரவும் அபாயம் இல்லை என தொற்றுநோயியல் துறையின் தலைவர் டாக்டர் சமித்த கினிகே மேலும் தெரிவித்துள்ளார்.

நிபா வைரஸ் குறித்து இலங்கையர்களுக்கு சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு samugammedia இந்தியா உட்பட பல நாடுகளில் பதிவாகியுள்ள ‘நிபா’ வைரஸைக் கண்டறியும் சிறப்புப் பரிசோதனைக் கருவிகளை கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், குறித்த வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.எந்தவொரு இடர் நிலைமையையும் எதிர்கொள்ளும் வகையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையுடன் நிபா வைரஸைக் கண்டறிவதற்குத் தேவையான விசேட பரிசோதனைக் கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் அவை இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இது குறித்து கருத்து தெரிவித்த வைரஸ் தொடர்பிலான விசேட வைத்தியர் ஜானகி அபேநாயக்க இந்த வைரஸ் தொடர்பில் தெரிவிக்கையில், நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உலகளாவிய ரீதியில் குறிப்பிட்ட சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் தயாரிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.தற்போதைய விஞ்ஞான தரவுகளின்படி இந்த நோய் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடியது என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நேரத்தில் இலங்கையர்கள் நன்கு அறிவுடனும் கவனத்துடனும் இருப்பது மிகவும் அவசியமானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.பாதிக்கப்பட்ட நபரின் உடல் திரவங்கள் மற்றும் சிறுநீர் மூலம் நிபா பரவுகிறது, மேலும் இந்த நோய் பெரும்பாலும் நோயாளியுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு பரவுகிறது.எவ்வாறாயினும், நிபா வைரஸ் பரவுவது மிகவும் மெதுவாக இருப்பதால், நாடுகளுக்கு இடையில் பரவும் அபாயம் இல்லை என தொற்றுநோயியல் துறையின் தலைவர் டாக்டர் சமித்த கினிகே மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement