காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினால் இன்றையதினம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடமிருந்து மேலதிகமான பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் துணுக்காய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது
இதில் துணுக்காய், ஜயங்குளம், புத்துவெட்டுவான், கோட்டைகட்டிய குளம் பகுதி மக்கள் நேற்றையதினம்(20) வருகை தந்திருந்தனர்
இறுதி யுத்த கால பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இந்த சந்தர்ப்பத்தில் வந்து சாட்சியம் அளித்து ஆவணங்களை வழங்கி இருந்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்,
தமக்கு இழப்பீடுகள் எதுவும் தேவையல்ல என்றும், இதேவேளை தமக்கு இறப்பு சான்றிதழ்களை வழங்க அவர்கள் எத்தனிப்பதாகவும் தெரிவித்த அவர்கள், தமக்கு தமது உறவுகளை தருமாறே கூறியுள்ளோம் என தெரிவித்தனர்.
இதேவேளை இது தொடர்பில் கருத்துரைத்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக உத்தியோகத்தர்,
தமக்கு இதுவரை 21,000 த்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் 5000 முறைப்பாடுகள் இராணுவ முப்படைகள் உடைய முறைப்பாடுகள் எனவும், அதிலும் இரட்டிப்பு செய்யப்பட்ட முறைப்பாடுகளாக 15000 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் தாம் பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அதிலும் 4786 முறைப்பாடுகளுக்கு விசாரணைகளை தாம் முடித்துள்ளதாகவும் அதிலும் 3400 விண்ணப்பங்களில் இடைக்கால நிவாரணத்தை அவர்கள் கேட்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிலும் 1300 விண்ணப்பங்களை இழப்பீட்டு அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், மேலும் காணாமல் செய்யப்பட்டதுக்கான சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ் என்பவற்றை உரிய விசாரணைகள் செய்து அவர்களுக்கு வழங்குவதற்கு தமது அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினால் துணுக்காயில் பதிவு நடவடிக்கைகள் முன்னெடுப்பு.samugammedia காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினால் இன்றையதினம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடமிருந்து மேலதிகமான பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் துணுக்காய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதுஇதில் துணுக்காய், ஜயங்குளம், புத்துவெட்டுவான், கோட்டைகட்டிய குளம் பகுதி மக்கள் நேற்றையதினம்(20) வருகை தந்திருந்தனர் இறுதி யுத்த கால பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இந்த சந்தர்ப்பத்தில் வந்து சாட்சியம் அளித்து ஆவணங்களை வழங்கி இருந்தனர்.இது தொடர்பில் கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தமக்கு இழப்பீடுகள் எதுவும் தேவையல்ல என்றும், இதேவேளை தமக்கு இறப்பு சான்றிதழ்களை வழங்க அவர்கள் எத்தனிப்பதாகவும் தெரிவித்த அவர்கள், தமக்கு தமது உறவுகளை தருமாறே கூறியுள்ளோம் என தெரிவித்தனர்.இதேவேளை இது தொடர்பில் கருத்துரைத்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக உத்தியோகத்தர், தமக்கு இதுவரை 21,000 த்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் 5000 முறைப்பாடுகள் இராணுவ முப்படைகள் உடைய முறைப்பாடுகள் எனவும், அதிலும் இரட்டிப்பு செய்யப்பட்ட முறைப்பாடுகளாக 15000 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் தாம் பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அதிலும் 4786 முறைப்பாடுகளுக்கு விசாரணைகளை தாம் முடித்துள்ளதாகவும் அதிலும் 3400 விண்ணப்பங்களில் இடைக்கால நிவாரணத்தை அவர்கள் கேட்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.அதிலும் 1300 விண்ணப்பங்களை இழப்பீட்டு அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், மேலும் காணாமல் செய்யப்பட்டதுக்கான சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ் என்பவற்றை உரிய விசாரணைகள் செய்து அவர்களுக்கு வழங்குவதற்கு தமது அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.