• Jun 26 2024

பேருந்து பயணங்களில் மாயமாகும் கையடக்க தொலைபேசிகள்..! யாழில் வசமாக சிக்கிய கும்பல்..! samugammedia

Chithra / Nov 18th 2023, 11:15 am
image

Advertisement


யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் பயணம் செய்வர்களை இலக்கு வைத்து கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது.

பேருந்தில் பயணம் செய்பவர்களின் தொலைபேசிகள் திருட்டுப் போவது சம்பந்தமாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பட்டு வந்த நிலையில்,

யாழ்ப்பாண பொலிஸ் குற்றதடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி இந்திக்க தலைமையிலான குழுவினர் மூன்று நபர்களை கைது செய்தனர்.

யாழ் நகரை அண்டிய வண்ணார் பண்ணை, பிரப்பங்குளம் சிவலிங்க புளியடியை சேர்ந்த 24,31,33 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன்,

மேலும் திருட்டுப்போன பல கையடக்க தொலைபேசிகளை மீட்கவுள்ளதாக தெரிவித்தனர். 


பேருந்து பயணங்களில் மாயமாகும் கையடக்க தொலைபேசிகள். யாழில் வசமாக சிக்கிய கும்பல். samugammedia யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் பயணம் செய்வர்களை இலக்கு வைத்து கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.இதன்போது நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது.பேருந்தில் பயணம் செய்பவர்களின் தொலைபேசிகள் திருட்டுப் போவது சம்பந்தமாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பட்டு வந்த நிலையில்,யாழ்ப்பாண பொலிஸ் குற்றதடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி இந்திக்க தலைமையிலான குழுவினர் மூன்று நபர்களை கைது செய்தனர்.யாழ் நகரை அண்டிய வண்ணார் பண்ணை, பிரப்பங்குளம் சிவலிங்க புளியடியை சேர்ந்த 24,31,33 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களிடம் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன்,மேலும் திருட்டுப்போன பல கையடக்க தொலைபேசிகளை மீட்கவுள்ளதாக தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement