• Nov 19 2024

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக துப்பாக்கி - பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை

Chithra / Aug 14th 2024, 8:52 am
image

 

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக ஆயுதம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு ஆயுதம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாத்துக் கொள்ள இவ்வாறு ரிபீடர் ரக துப்பாக்கி வழங்கப்பட உள்ளது.

ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கைத்துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலதிகமாக ரிபீடர் ரக துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரிபீடர் ரக துப்பாக்கி வழங்கப்பட முடியும் என நாடாளுமன் பொதுச் செயலாளர் பாதுகாப்பு அமைச்சிடம் அறிவித்துள்ளார்.

ரிபீடர் துப்பாக்கிகளை வழங்குமாறு ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே விண்ணப்பம் செய்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள சீன உற்பத்தியான கைத்துப்பாக்கிகள் பழயவை என கூறப்படுகின்றது.

இதற்கு அமைய ரிபீடர் துப்பாக்கிகள் தருவிக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக துப்பாக்கி - பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக ஆயுதம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு ஆயுதம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாத்துக் கொள்ள இவ்வாறு ரிபீடர் ரக துப்பாக்கி வழங்கப்பட உள்ளது.ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கைத்துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலதிகமாக ரிபீடர் ரக துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரிபீடர் ரக துப்பாக்கி வழங்கப்பட முடியும் என நாடாளுமன் பொதுச் செயலாளர் பாதுகாப்பு அமைச்சிடம் அறிவித்துள்ளார்.ரிபீடர் துப்பாக்கிகளை வழங்குமாறு ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே விண்ணப்பம் செய்துள்ளனர்.நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள சீன உற்பத்தியான கைத்துப்பாக்கிகள் பழயவை என கூறப்படுகின்றது.இதற்கு அமைய ரிபீடர் துப்பாக்கிகள் தருவிக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

Advertisement

Advertisement

Advertisement