• Nov 09 2024

இரத்து செய்யப்பட்ட 3000 இற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள்!

Chithra / Nov 8th 2024, 8:11 am
image

 

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளுக்கு அமைவாக, குறித்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதும், வாகனங்கள் சரியான தரத்தில் இல்லாததுமே பிரதான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பிரிவின் பேராசிரியர் மொஹமட் மஹீஷ் தெரிவித்துள்ளார்.

எனவே, வாகனத்தை இயக்குவதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிப்பது இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரத்து செய்யப்பட்ட 3000 இற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள்  இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளுக்கு அமைவாக, குறித்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதும், வாகனங்கள் சரியான தரத்தில் இல்லாததுமே பிரதான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பிரிவின் பேராசிரியர் மொஹமட் மஹீஷ் தெரிவித்துள்ளார்.எனவே, வாகனத்தை இயக்குவதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிப்பது இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement