• Mar 06 2025

05 வயது மகனை காப்பாற்ற முயன்ற தாயும் பலி; இலங்கையில் நடந்த துயர சம்பவம்

Chithra / Mar 6th 2025, 7:21 am
image


ஹம்பாந்தோட்டை சூரியவெவ, வீரிய கிராமப் பகுதியைச் சேர்ந்த தாயும் அவரது ஐந்து வயது மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

அருகிலுள்ள வீட்டில் பதிக்கப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத மின்சார வடத்தில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக சூரியவெவ பொலிஸார் கூறியுள்ளனர்.

இறந்த குழந்தை தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு குழந்தைகள் பயன்படுத்தும் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தபோது,

​​அங்கீகரிக்கப்படாத மின்சார வடத்தில் சிக்கியதாகவும், தனது மகனைக் காப்பாற்ற சம்பவ இடத்திற்கு விரைந்த தாய்க்கும் மின்சாரம் தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 38 வயது தாயும் அவரது 05 வயது மகனும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

05 வயது மகனை காப்பாற்ற முயன்ற தாயும் பலி; இலங்கையில் நடந்த துயர சம்பவம் ஹம்பாந்தோட்டை சூரியவெவ, வீரிய கிராமப் பகுதியைச் சேர்ந்த தாயும் அவரது ஐந்து வயது மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.அருகிலுள்ள வீட்டில் பதிக்கப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத மின்சார வடத்தில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக சூரியவெவ பொலிஸார் கூறியுள்ளனர்.இறந்த குழந்தை தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு குழந்தைகள் பயன்படுத்தும் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தபோது,​​அங்கீகரிக்கப்படாத மின்சார வடத்தில் சிக்கியதாகவும், தனது மகனைக் காப்பாற்ற சம்பவ இடத்திற்கு விரைந்த தாய்க்கும் மின்சாரம் தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் 38 வயது தாயும் அவரது 05 வயது மகனும் உயிரிழந்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement