• Jul 05 2024

யாழில் மோட்டார் சைக்கிளும் வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - இரு இளைஞர்கள் கவலைக்கிடம்!

Chithra / Feb 5th 2023, 7:38 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி தாவடி சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் - வானும் நேருக்கு நேர் மோதி விபத்து  இடம்பெற்றுள்ளது. 


மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக யாழ் நோக்கி திரும்பிய ஓட்டுமடத்தை சேர்ந்த இரு இளைஞர்களும், யாழிலிருந்து கே.கே.எஸ் பக்கம் சென்று கொண்டிருந்த தென் இலங்கையை சேர்ந்த வானுமே நேருக்கு நேர் மோதி விபத்தி சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


குறித்த விபத்தில் இரு இளைஞர்களும் எதிர் திசையில் வெகு தூரம் தூக்கி எறியப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியதுடன் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 


மோட்டார் வண்டியும், வானும் பலத்த சேதத்திற்கு உள்ளாகிய நிலையில் சம்பவ இடத்தில் காணப்படுகின்றது. 


சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணபொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


யாழில் மோட்டார் சைக்கிளும் வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - இரு இளைஞர்கள் கவலைக்கிடம் யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி தாவடி சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் - வானும் நேருக்கு நேர் மோதி விபத்து  இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக யாழ் நோக்கி திரும்பிய ஓட்டுமடத்தை சேர்ந்த இரு இளைஞர்களும், யாழிலிருந்து கே.கே.எஸ் பக்கம் சென்று கொண்டிருந்த தென் இலங்கையை சேர்ந்த வானுமே நேருக்கு நேர் மோதி விபத்தி சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் இரு இளைஞர்களும் எதிர் திசையில் வெகு தூரம் தூக்கி எறியப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியதுடன் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மோட்டார் வண்டியும், வானும் பலத்த சேதத்திற்கு உள்ளாகிய நிலையில் சம்பவ இடத்தில் காணப்படுகின்றது. சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணபொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement