ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கே தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கையில் பல கட்சிகள் போட்டியிடவுள்ளன.
அதேவேளை, சி.வி.விக்னேஸ்வரனும் 07 கட்சிகளை இணைத்து தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது அவருடைய ஜனநாயக விடயம் ஆகும். அதில் எவ்வித தவறும் இல்லை.
ஜனநாயக ரீதியில் யாரும் தேர்தலில் போட்டியிட முடியும்.
இவ்வாறானதொரு நிலையில், கடந்த ஜனாதிபதி தேர்தல்களில் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தமிழ் கட்சிகள் கூறியவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கவில்லை.
மாறாக அவர்கள் சரியான ஒருவரை தேர்ந்தெடுத்தே வாக்களித்தனர்.
இந்நிலையில், தமிழ் மக்கள் பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு தான் வாக்களிப்பார்கள் என்ற நிலைப்பாடு காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கே. பிரபா கணேசன் சுட்டிக்காட்டு. ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கே தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று(05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கையில் பல கட்சிகள் போட்டியிடவுள்ளன. அதேவேளை, சி.வி.விக்னேஸ்வரனும் 07 கட்சிகளை இணைத்து தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது அவருடைய ஜனநாயக விடயம் ஆகும். அதில் எவ்வித தவறும் இல்லை.ஜனநாயக ரீதியில் யாரும் தேர்தலில் போட்டியிட முடியும்.இவ்வாறானதொரு நிலையில், கடந்த ஜனாதிபதி தேர்தல்களில் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தமிழ் கட்சிகள் கூறியவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கவில்லை.மாறாக அவர்கள் சரியான ஒருவரை தேர்ந்தெடுத்தே வாக்களித்தனர்.இந்நிலையில், தமிழ் மக்கள் பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு தான் வாக்களிப்பார்கள் என்ற நிலைப்பாடு காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.