• May 18 2024

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விவகாரம்; மாட்டிவிட்ட பேராசிரியர்- முகநூலில் பதிவிட்டவர்களுக்கு எதிராக விசாரணை! samugammedia

Chithra / Nov 13th 2023, 1:55 pm
image

Advertisement


யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பில் சர்ச்சை எழுந்த காலத்தில் அது தொடர்பாக முகநூலில் பதிவு செய்த யாழ். பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு  எதிராக  பல்கலைக்கழக பேராசிரியரால் பொலிசாரிடம் நேரடியாக  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் சிலரது பெயர்கள்  முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக  தெரியவருகிறது. 


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி  தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றும் சண்முகநாதன் பிரதீபன் என்ற நபருக்கு எதிராகவே இணைய வழி ஊடாக பொலிஸ் மா அதிபருக்கும்( Tell To IGP), யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இணையத்தில் அவதூறு பரப்பியமை தொடர்பிலேயே முறைப்பாடு பதிவு செய்ப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் குறித்த நபரை காங்கேசன்துறையில்  உள்ள பொலிஸாரின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்துக்கும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் உள்ளிட்ட இருவர் மேற்கொண்ட முறைப்பாடுகளையடுத்து அது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.


இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் போடப்பட்ட முகநூல் பதிவுகள் தொடர்பாகவே பொலிஸ் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது. இந்த குற்றச்சாட்டின் கீழ்  சில ஊடகங்கள், தனிநபர்கள், பல்கலை மாணவர்களும் விசாரணைக்குட்படுத்தப்படலாம் என சந்தேகிக்கப்படுகிறது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விவகாரம்; மாட்டிவிட்ட பேராசிரியர்- முகநூலில் பதிவிட்டவர்களுக்கு எதிராக விசாரணை samugammedia யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பில் சர்ச்சை எழுந்த காலத்தில் அது தொடர்பாக முகநூலில் பதிவு செய்த யாழ். பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு  எதிராக  பல்கலைக்கழக பேராசிரியரால் பொலிசாரிடம் நேரடியாக  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் சிலரது பெயர்கள்  முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக  தெரியவருகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி  தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றும் சண்முகநாதன் பிரதீபன் என்ற நபருக்கு எதிராகவே இணைய வழி ஊடாக பொலிஸ் மா அதிபருக்கும்( Tell To IGP), யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இணையத்தில் அவதூறு பரப்பியமை தொடர்பிலேயே முறைப்பாடு பதிவு செய்ப்பட்டுள்ளது.இதனடிப்படையில் குறித்த நபரை காங்கேசன்துறையில்  உள்ள பொலிஸாரின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்துக்கும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் உள்ளிட்ட இருவர் மேற்கொண்ட முறைப்பாடுகளையடுத்து அது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் போடப்பட்ட முகநூல் பதிவுகள் தொடர்பாகவே பொலிஸ் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது. இந்த குற்றச்சாட்டின் கீழ்  சில ஊடகங்கள், தனிநபர்கள், பல்கலை மாணவர்களும் விசாரணைக்குட்படுத்தப்படலாம் என சந்தேகிக்கப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement