• Jun 26 2024

யாழில் இருந்து தப்பித்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த கொலை குற்றவாளி..! விசாரணையில் அதிர்ச்சித் தகவல் samugammedia

Chithra / Nov 12th 2023, 9:49 am
image

Advertisement


யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் வழியாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்த நபர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றின் பிரதான சந்தேகநபர் எனத் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து படகு மூலம் சென்ற குறித்த நபர் தனுஷ்கோடி பகுதியில் நேற்று (11) சனிக்கிழமை காலை கரையிறங்கியுள்ளார்.

இது தொடர்பில் தகவல் கிடைத்த மரைன் பொலிசார் அவரை அழைத்து சென்று விசாரணைகளைன முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - அரியாலை,  சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு படகு மூலம் தப்பித்து தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் புகைப்படத்தின் அடிப்படையில், அவர் மீது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் கொலை வழக்கு ஒன்றுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபர் என யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

யாழில் இருந்து தப்பித்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த கொலை குற்றவாளி. விசாரணையில் அதிர்ச்சித் தகவல் samugammedia யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் வழியாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்த நபர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றின் பிரதான சந்தேகநபர் எனத் தெரியவந்துள்ளது.யாழ்ப்பாணத்தில் இருந்து படகு மூலம் சென்ற குறித்த நபர் தனுஷ்கோடி பகுதியில் நேற்று (11) சனிக்கிழமை காலை கரையிறங்கியுள்ளார்.இது தொடர்பில் தகவல் கிடைத்த மரைன் பொலிசார் அவரை அழைத்து சென்று விசாரணைகளைன முன்னெடுத்துள்ளனர்.யாழ்ப்பாணம் - அரியாலை,  சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு படகு மூலம் தப்பித்து தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.குறித்த நபரின் புகைப்படத்தின் அடிப்படையில், அவர் மீது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் கொலை வழக்கு ஒன்றுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபர் என யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement