• Apr 30 2024

மூவரின் உயிரினை பறித்த காளான் சூப்..! அதிர்ச்சிச் சம்பவம் samugammedia

Chithra / Nov 2nd 2023, 9:59 am
image

Advertisement


காளான் சாப்பிட்டதால் ஏற்பட்ட சிக்கல்களால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜூலை மாதம், விக்டோரியா நகரமான லியோன்காதாவில் மதிய உணவில் கலந்து கொண்டதன் பின்னர் இறந்த மூவரும் நோய்வாய்ப்பட்டனர்.

மேலும் உணவு அருந்திய மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி மதிய உணவை தயாரித்த எரின் பேட்டர்சன் என்ற பெண் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

எரின் பேட்டர்சன், தான் குற்றமற்றவர் என்று தெரிவித்திருந்த போதிலும், அவர் விசாரிக்கப்பட உள்ளதாகவும், அவரது வீட்டில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது.

மதிய உணவில் நான்கு பேர் கலந்து கொண்டனர், அவர்கள் அனைவரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நால்வரும் ஜூலை 30 அன்று உணவை உட்கொண்டதால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் 70 வயதான தம்பதியரும் 66 வயதான பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் இறந்தனர்.

மேலும் ஒருவர் இரண்டு மாத சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளார்.

சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காளான் வகையைப் பயன்படுத்தி ‘பீஃப் வெலிங்டன் பை’ சமைத்ததாக எரின் பேட்டர்சன் கூறியிருந்தார்.

“நான் நேசித்தவர்களை காயப்படுத்த எனக்கு எந்த காரணமும் இல்லை என்பதை நான் மீண்டும் கூற விரும்புகிறேன்” என்று எரின் பேட்டர்சன் தெரிவித்திருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூவரின் உயிரினை பறித்த காளான் சூப். அதிர்ச்சிச் சம்பவம் samugammedia காளான் சாப்பிட்டதால் ஏற்பட்ட சிக்கல்களால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஜூலை மாதம், விக்டோரியா நகரமான லியோன்காதாவில் மதிய உணவில் கலந்து கொண்டதன் பின்னர் இறந்த மூவரும் நோய்வாய்ப்பட்டனர்.மேலும் உணவு அருந்திய மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அதன்படி மதிய உணவை தயாரித்த எரின் பேட்டர்சன் என்ற பெண் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.எரின் பேட்டர்சன், தான் குற்றமற்றவர் என்று தெரிவித்திருந்த போதிலும், அவர் விசாரிக்கப்பட உள்ளதாகவும், அவரது வீட்டில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது.மதிய உணவில் நான்கு பேர் கலந்து கொண்டனர், அவர்கள் அனைவரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.இந்த நால்வரும் ஜூலை 30 அன்று உணவை உட்கொண்டதால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.மேலும் 70 வயதான தம்பதியரும் 66 வயதான பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் இறந்தனர்.மேலும் ஒருவர் இரண்டு மாத சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளார்.சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காளான் வகையைப் பயன்படுத்தி ‘பீஃப் வெலிங்டன் பை’ சமைத்ததாக எரின் பேட்டர்சன் கூறியிருந்தார்.“நான் நேசித்தவர்களை காயப்படுத்த எனக்கு எந்த காரணமும் இல்லை என்பதை நான் மீண்டும் கூற விரும்புகிறேன்” என்று எரின் பேட்டர்சன் தெரிவித்திருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement