• Sep 17 2024

ரிசாட்,ரவூப் ஹக்கீம்,அதாவுள்ளா ஆகியோருக்கு எதிராக முஸ்லீம் மக்கள் ஆர்ப்பாட்டம்- சிறிதரனுக்கும் கண்டனம்.!SamugamMedia

Sharmi / Mar 14th 2023, 4:00 pm
image

Advertisement

வடக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்தை தடுக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கருத்துக்கு எதிரான முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டத்தை தாம் வரவேற்பதாக ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த காலத்தில் அமைச்சராக இருந்த ரிசாட் பதியூதின் இந்த மீள்குடியேற்றம் தொடர்பாக அசமந்தபோக்குடன் செய்பட்டிருந்தாக அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 32 வருடங்கள் கடந்த பின்பும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் இன்னமும் சரியாக முன்னெடுக்கப்பவில்லை என்றும் காணி இல்லாத முஸ்லீம் மக்களுக்கு அரசகாணிகளை பகிர்ந்தளிக்கவுமில்லை என முபாறக் அப்துல் மஜீத் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம்களை மீள் குடியேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கெதிராக சிறிதரன், முஸ்லிம் இனவாத  கருத்துக்களை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழு உடனடியாக நியமிக்கப்பட்டு அநீதிக்குள்ளான மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் கடந்த காலத்தில் வடக்கு மாகாண முஸ்லிம்களின் ஓட்டுக்களை பெற்று அமைச்சர்களாகவும்,
மாகாண சபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக தமது சுக போக வாழ்க்கையை பலப்படுத்தியிருந்ததாகவும் முஸ்லீம்களின் பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்றும் முபாறக் அப்துல் மஜீத் குற்றம் சுமத்தியுள்ளார்.

மீள் குடியேற்றத்தை சரியாக செய்யாத முன்னாள் அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், அதாவுள்ளா ஆகியோர்களுக்கும் எதிராக முஸ்லீம் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதே இத்தகைய ஏமாற்று கட்சிகளுக்கு பாடமாக அமையும் என்றும் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார்.

ரிசாட்,ரவூப் ஹக்கீம்,அதாவுள்ளா ஆகியோருக்கு எதிராக முஸ்லீம் மக்கள் ஆர்ப்பாட்டம்- சிறிதரனுக்கும் கண்டனம்.SamugamMedia வடக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்தை தடுக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கருத்துக்கு எதிரான முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டத்தை தாம் வரவேற்பதாக ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.அத்துடன், கடந்த காலத்தில் அமைச்சராக இருந்த ரிசாட் பதியூதின் இந்த மீள்குடியேற்றம் தொடர்பாக அசமந்தபோக்குடன் செய்பட்டிருந்தாக அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 32 வருடங்கள் கடந்த பின்பும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் இன்னமும் சரியாக முன்னெடுக்கப்பவில்லை என்றும் காணி இல்லாத முஸ்லீம் மக்களுக்கு அரசகாணிகளை பகிர்ந்தளிக்கவுமில்லை என முபாறக் அப்துல் மஜீத் சுட்டிக்காட்டியுள்ளார்.முஸ்லிம்களை மீள் குடியேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கெதிராக சிறிதரன், முஸ்லிம் இனவாத  கருத்துக்களை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.எனவே, வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழு உடனடியாக நியமிக்கப்பட்டு அநீதிக்குள்ளான மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் கடந்த காலத்தில் வடக்கு மாகாண முஸ்லிம்களின் ஓட்டுக்களை பெற்று அமைச்சர்களாகவும், மாகாண சபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக தமது சுக போக வாழ்க்கையை பலப்படுத்தியிருந்ததாகவும் முஸ்லீம்களின் பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்றும் முபாறக் அப்துல் மஜீத் குற்றம் சுமத்தியுள்ளார்.மீள் குடியேற்றத்தை சரியாக செய்யாத முன்னாள் அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், அதாவுள்ளா ஆகியோர்களுக்கும் எதிராக முஸ்லீம் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதே இத்தகைய ஏமாற்று கட்சிகளுக்கு பாடமாக அமையும் என்றும் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement