• Jul 02 2024

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்ற முத்தமிழ் விழா...! samugammedia

Sharmi / Nov 22nd 2023, 10:21 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் முத்தமிழ் விழா நேற்றுமுன்தினம்(20) கல்லூரியின் கலையரங்கில் இடம்பெற்றது.

கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வானது காலை அமர்வு பேராசிரியர் கா.சிவத்தம்பி அரங்கு எனவும்  மாலை அரங்கு நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அரங்கு எனவும் பெயரிடப்பட்டன.

காலை அமர்வில் பிரதம விருந்தினராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியர் வ.மகேஸ்வரனும்  சிறப்பு விருந்தினர்களாக கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் ச லலீசன் மற்றும் இலங்கை வங்கி யாழ்ப்பாண இரண்டாம் கிளையின் முகாமையாளர் எ.சந்தனுவும்,  கௌரவ விருந்தினர்களாக வலி. கிழக்கு பிரதேச சபையின் செயலாளர் இ.பகிரதன் மற்றும் நீர்வேலி பவாணி களஞ்சிய உரிமையாளர் பொன்னையா கிருஸ்னானந்தனும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

மாலை அமர்விற்கு பிரதம விருந்தினராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை விரிவுரையாளர் கலாநிதி க.ரகுபரனும்,  சிறப்பு விருந்தினர்களாக வைத்திய கலாநிதி சிவன்சுதன் மற்றும் கல்லூரியின் ஓய்வுநிலை விரிவுரையாளர் திருமதி விக்னேஸ்வரி நரேந்திராவும் கலந்து சிறப்பித்துள்ளதுடன், கெளரவ விருந்தினர்களாக கல்லூரியின் ஓய்வுநிலை விரிவுரையாளர் மு. கெளரிகாந்தன் மற்றும் முன்னைநாள் கல்லூரியின் ஆசிரிய மாணவி திருமதி காயத்திரி அகிலனும் கலந்து சிறப்பித்தனர்.

இவ்விழாவில் மாணவ ஆசிரியர்கள் முத்தமிழின் இயல், இசை, நாடகம் ஆகியவற்றில் ஆற்றுகைகளை வெளிப்படுத்தினர்.

அதேவேளை  மாணவ ஆசிரியர்களுக்கு தமிழ் மொழிசார்ந்த போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன .

இந்நிகழ்வில் கல்லூரியின் விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், மாணவ ஆசிரியர்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்ற முத்தமிழ் விழா. samugammedia யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் முத்தமிழ் விழா நேற்றுமுன்தினம்(20) கல்லூரியின் கலையரங்கில் இடம்பெற்றது.கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வானது காலை அமர்வு பேராசிரியர் கா.சிவத்தம்பி அரங்கு எனவும்  மாலை அரங்கு நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அரங்கு எனவும் பெயரிடப்பட்டன. காலை அமர்வில் பிரதம விருந்தினராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியர் வ.மகேஸ்வரனும்  சிறப்பு விருந்தினர்களாக கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் ச லலீசன் மற்றும் இலங்கை வங்கி யாழ்ப்பாண இரண்டாம் கிளையின் முகாமையாளர் எ.சந்தனுவும்,  கௌரவ விருந்தினர்களாக வலி. கிழக்கு பிரதேச சபையின் செயலாளர் இ.பகிரதன் மற்றும் நீர்வேலி பவாணி களஞ்சிய உரிமையாளர் பொன்னையா கிருஸ்னானந்தனும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .மாலை அமர்விற்கு பிரதம விருந்தினராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை விரிவுரையாளர் கலாநிதி க.ரகுபரனும்,  சிறப்பு விருந்தினர்களாக வைத்திய கலாநிதி சிவன்சுதன் மற்றும் கல்லூரியின் ஓய்வுநிலை விரிவுரையாளர் திருமதி விக்னேஸ்வரி நரேந்திராவும் கலந்து சிறப்பித்துள்ளதுடன், கெளரவ விருந்தினர்களாக கல்லூரியின் ஓய்வுநிலை விரிவுரையாளர் மு. கெளரிகாந்தன் மற்றும் முன்னைநாள் கல்லூரியின் ஆசிரிய மாணவி திருமதி காயத்திரி அகிலனும் கலந்து சிறப்பித்தனர். இவ்விழாவில் மாணவ ஆசிரியர்கள் முத்தமிழின் இயல், இசை, நாடகம் ஆகியவற்றில் ஆற்றுகைகளை வெளிப்படுத்தினர்.அதேவேளை  மாணவ ஆசிரியர்களுக்கு தமிழ் மொழிசார்ந்த போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன . இந்நிகழ்வில் கல்லூரியின் விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், மாணவ ஆசிரியர்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement