• May 19 2024

'நாம்-200' நிகழ்வின் அறிமுக விழாவும், சின்னம் வெளியீடும்...!samugammedia

Sharmi / Oct 5th 2023, 4:55 pm
image

Advertisement

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அம் மக்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பாராட்டியும், அவர்களை கௌரவிக்கும் வகையிலும் 'நாம் - 200' நிகழ்வின் அறிமுகவிழாவும்,  சின்னம் வெளியீடும் இன்று(05) நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில், பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.

 நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில், நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த,  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், இந்திய உயர்ஸ்தானிக்கராலயத்தின் விசேட பிரதிநிதியாக எல்டோஸ், அமைச்சின் செயலாளர் எஸ்.சமரதிவாகர, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் உட்பட அதிகாரிகள், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் உட்பட அதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்கள், பெருந்தோட்ட கம்பனிகளுடைய நிறைவேற்று அதிகாரிகள், வர்த்தக பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அம்மக்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பாராட்டியும், அவர்களை கௌரவிக்கும் வகையிலும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சால் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 இதன் ஓர் அங்கமாக முன்னெடுக்கப்பட்டுள்ள 'நாம் - 200' திட்டமானது, மலையக பெருந்தோட்ட மக்களின் கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் அமையவுள்ளது.



'நாம்-200' நிகழ்வின் அறிமுக விழாவும், சின்னம் வெளியீடும்.samugammedia மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அம் மக்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பாராட்டியும், அவர்களை கௌரவிக்கும் வகையிலும் 'நாம் - 200' நிகழ்வின் அறிமுகவிழாவும்,  சின்னம் வெளியீடும் இன்று(05) நடைபெற்றது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில், பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில், நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த,  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், இந்திய உயர்ஸ்தானிக்கராலயத்தின் விசேட பிரதிநிதியாக எல்டோஸ், அமைச்சின் செயலாளர் எஸ்.சமரதிவாகர, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் உட்பட அதிகாரிகள், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் உட்பட அதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்கள், பெருந்தோட்ட கம்பனிகளுடைய நிறைவேற்று அதிகாரிகள், வர்த்தக பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர். மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அம்மக்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பாராட்டியும், அவர்களை கௌரவிக்கும் வகையிலும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சால் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஓர் அங்கமாக முன்னெடுக்கப்பட்டுள்ள 'நாம் - 200' திட்டமானது, மலையக பெருந்தோட்ட மக்களின் கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் அமையவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement