• Oct 06 2024

இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவது குறித்து நாமல் ஆதங்கம்..! samugammedia

Chithra / Jun 12th 2023, 11:55 am
image

Advertisement

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனுமான நாமல் ராஜபக்‌ஷ, தற்போது இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் அரச நிறுவனங்களை (SOEs) தனியார் மயமாக்கும் முயற்சிகள் குறித்து தீவிர ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபகரமான வணிகங்களாக மாற்றுவதற்கு அவற்றை தனியார்மயமாக்குவது பற்றி சிந்திக்கக்கூடியதாக இருக்கும் அதே வேளையில், ஏற்கனவே இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்களை  தனியார்மயமாக்குவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என கூறியுள்ளார்.

இலாபகரமான அரச நிறுவனங்களை தனியார்மயமாக்க ஒரு முடிவு எடுக்கப்பட்டிருந்தால், அத்தகைய முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தைப் புரிந்துகொள்வது அவசியம் என்பதையும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவது குறித்து நாமல் ஆதங்கம். samugammedia ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனுமான நாமல் ராஜபக்‌ஷ, தற்போது இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் அரச நிறுவனங்களை (SOEs) தனியார் மயமாக்கும் முயற்சிகள் குறித்து தீவிர ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபகரமான வணிகங்களாக மாற்றுவதற்கு அவற்றை தனியார்மயமாக்குவது பற்றி சிந்திக்கக்கூடியதாக இருக்கும் அதே வேளையில், ஏற்கனவே இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்களை  தனியார்மயமாக்குவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என கூறியுள்ளார்.இலாபகரமான அரச நிறுவனங்களை தனியார்மயமாக்க ஒரு முடிவு எடுக்கப்பட்டிருந்தால், அத்தகைய முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தைப் புரிந்துகொள்வது அவசியம் என்பதையும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement