• Nov 24 2024

தேசிய மட்ட,வடமாகாண விளையாட்டுப் போட்டி - சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு!

Tamil nila / Nov 8th 2024, 9:31 pm
image

தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் மன்னார் மாவட்டத்தில் முதல் தடவையாக தங்கப் பதக்கம் பெற்ற பெற்ற முதல் வீராங்கனையான மன்.தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி ஏ.யதுர்சிக்கா, மற்றும் வடமாகாண மெய்வல்லுநர் தடகளப் போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (8) வெள்ளிக்கிழமை காலை மன்னாரில் இடம் பெற்றது.


தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.


இதன் போது சாதனை படைத்த மாணவ மாணவிகள் மன்னார் பிரதான பாலத்தடி யில் வைத்து கௌரவிக்கப்பட்டு வாகன பவனியாக தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வரை அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதனை தொடர்ந்து பாடசாலையில் கௌரவிப்பு நிகழ்வுகள் இடம் பெற்றது.


குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,கௌரவ விருந்தினர்களாக மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்,மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் செல்வி ஜி.டி.தேவராஜ்  , மற்றும் விசேட விருந்தினர்களாக அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார்,அருட்தந்தை எம்.ஜெயபாலன் அடிகளார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 


 இதன் போது சாதனை படைத்த மாணவ மாணவிகள்  கௌரவிக்கப்பட்டனர்.


தேசிய மட்ட,வடமாகாண விளையாட்டுப் போட்டி - சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் மன்னார் மாவட்டத்தில் முதல் தடவையாக தங்கப் பதக்கம் பெற்ற பெற்ற முதல் வீராங்கனையான மன்.தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி ஏ.யதுர்சிக்கா, மற்றும் வடமாகாண மெய்வல்லுநர் தடகளப் போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (8) வெள்ளிக்கிழமை காலை மன்னாரில் இடம் பெற்றது.தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.இதன் போது சாதனை படைத்த மாணவ மாணவிகள் மன்னார் பிரதான பாலத்தடி யில் வைத்து கௌரவிக்கப்பட்டு வாகன பவனியாக தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வரை அழைத்துச் செல்லப்பட்டனர்.அதனை தொடர்ந்து பாடசாலையில் கௌரவிப்பு நிகழ்வுகள் இடம் பெற்றது.குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,கௌரவ விருந்தினர்களாக மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்,மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் செல்வி ஜி.டி.தேவராஜ்  , மற்றும் விசேட விருந்தினர்களாக அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார்,அருட்தந்தை எம்.ஜெயபாலன் அடிகளார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.  இதன் போது சாதனை படைத்த மாணவ மாணவிகள்  கௌரவிக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement