• Nov 28 2024

கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனை; தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார் யாழ். பல்கலை மாணவி

Chithra / Jun 27th 2024, 4:11 pm
image

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

102 ஆவது தேசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டிகள்  தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

இதில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவியும், யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பவருமான நேசராசா டக்ஸிதா, மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில்  தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

கோலூன்றிப் பாய்தலில் 3.72 மீற்றர் உயரத்தைத் தாவியதன் மூலமே தக்சிதா புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

சாதனை படைத்த மாணவி ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கையில்,

பாடசாலைப் படிப்பை முடித்தாலும் எனது பயிற்சிக்கு உறுதுணையாக இருந்து, இந்த சாதனையை நிலைநாட்ட  உறுதுணையாக இருந்த பாசாலை அதிபர், பழைய மாணவர் சங்கம், பாடசாலை சமூகம் மற்றும் எனது பெற்றோருக்கும் நன்றி.

மேலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச அளவில் சாதனையை நிலைநாட்டுவதே எனது இலட்சியம்' என அவர் தெரிவித்தார்.

 

கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனை; தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார் யாழ். பல்கலை மாணவி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.102 ஆவது தேசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டிகள்  தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.இதில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவியும், யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பவருமான நேசராசா டக்ஸிதா, மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில்  தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.கோலூன்றிப் பாய்தலில் 3.72 மீற்றர் உயரத்தைத் தாவியதன் மூலமே தக்சிதா புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.சாதனை படைத்த மாணவி ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கையில்,பாடசாலைப் படிப்பை முடித்தாலும் எனது பயிற்சிக்கு உறுதுணையாக இருந்து, இந்த சாதனையை நிலைநாட்ட  உறுதுணையாக இருந்த பாசாலை அதிபர், பழைய மாணவர் சங்கம், பாடசாலை சமூகம் மற்றும் எனது பெற்றோருக்கும் நன்றி.மேலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச அளவில் சாதனையை நிலைநாட்டுவதே எனது இலட்சியம்' என அவர் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement