• Apr 25 2024

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை; வடக்கில் அரச வங்கிகள் உட்பட பல சேவைகள் முடக்கம்! SamugamMedia

Chithra / Mar 1st 2023, 10:10 am
image

Advertisement

அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியாக இன்று இடம்பெற்றுவரும் பணிபகிஸ்கரிப்பு போராட்டம் வவுனியாவிலும் முன்னெடுக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

நாட்டில் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக வருமானம் பெறும் தொழில் வல்லுநர்களிடமிருந்து 06 வீதம் முதல் 36 வீதம் வரை வரி அறவிடப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதிய வரித்திருத்தத்தை மறுசீரமைப்பிற்கு உட்படுத்துமாறு கோரியும் தொழிற்சங்க கட்டமைப்புக்களால் நாடளாவிய ரீதியில் குறித்த போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

போராட்டம் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுகளை தவிர்ந்த ஏனைய சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிகிச்சைகளிற்காக சென்ற பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்திருந்தனர். 

இதேவேளை குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவின் பிரதான வங்கிகளின் செயற்பாடுகளும் இன்றையதினம் தடைப்பட்டிருந்தது. இதனால் தூர இடங்களில் இருந்து வங்கிச்சேவைகளுக்காக வருகைதந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றிருந்தமையை அவதானிக்க முடிந்தது.


...

நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டத்துக்கு ஆதரவாக யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலை மற்றும் வங்கிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.

அதற்கமைய சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் இன்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதன்காரணமாக, அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சேவைகள் இடம்பெறாத்தால் வருகை தந்த நோயாளர்கள் திரும்பி சென்றனர்.

மேலும் தொழிற்சங்க போராட்டத்துக்கு ஆதரவாக சாவகச்சேரி மற்றும் கொடிகாமத்தில் அமைந்துள்ள அரச வங்கிகள், தனியார் வங்கிகள் சிலவும் மூடப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.


...

கிளிநொச்சி மாவட்டத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கிளிநொச்சியில் உள்ள அரச வங்கிகள் முழுமையாக பூட்டப்பட்டுள்ளதுடன், சேவைகள் எவையும் இடம்பெறவில்லை. இதனால் மக்கள் வங்கி சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதேவேளை மின்சார சபையின் அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. ஊழியர்கள் பணிக்கு செல்லாது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இதேவேளை, அவசர சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மின் பொறியியலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.


நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை; வடக்கில் அரச வங்கிகள் உட்பட பல சேவைகள் முடக்கம் SamugamMedia அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியாக இன்று இடம்பெற்றுவரும் பணிபகிஸ்கரிப்பு போராட்டம் வவுனியாவிலும் முன்னெடுக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது.நாட்டில் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக வருமானம் பெறும் தொழில் வல்லுநர்களிடமிருந்து 06 வீதம் முதல் 36 வீதம் வரை வரி அறவிடப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதிய வரித்திருத்தத்தை மறுசீரமைப்பிற்கு உட்படுத்துமாறு கோரியும் தொழிற்சங்க கட்டமைப்புக்களால் நாடளாவிய ரீதியில் குறித்த போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.போராட்டம் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுகளை தவிர்ந்த ஏனைய சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிகிச்சைகளிற்காக சென்ற பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்திருந்தனர். இதேவேளை குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவின் பிரதான வங்கிகளின் செயற்பாடுகளும் இன்றையதினம் தடைப்பட்டிருந்தது. இதனால் தூர இடங்களில் இருந்து வங்கிச்சேவைகளுக்காக வருகைதந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றிருந்தமையை அவதானிக்க முடிந்தது.நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டத்துக்கு ஆதரவாக யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலை மற்றும் வங்கிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.அதற்கமைய சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் இன்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.அதன்காரணமாக, அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சேவைகள் இடம்பெறாத்தால் வருகை தந்த நோயாளர்கள் திரும்பி சென்றனர்.மேலும் தொழிற்சங்க போராட்டத்துக்கு ஆதரவாக சாவகச்சேரி மற்றும் கொடிகாமத்தில் அமைந்துள்ள அரச வங்கிகள், தனியார் வங்கிகள் சிலவும் மூடப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.கிளிநொச்சி மாவட்டத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கிளிநொச்சியில் உள்ள அரச வங்கிகள் முழுமையாக பூட்டப்பட்டுள்ளதுடன், சேவைகள் எவையும் இடம்பெறவில்லை. இதனால் மக்கள் வங்கி சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.இதேவேளை மின்சார சபையின் அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. ஊழியர்கள் பணிக்கு செல்லாது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதேவேளை, அவசர சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மின் பொறியியலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement