நாடு முழுவதும் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட பொலிஸார் மே மாதம் 8 ஆம் திகதி வரை பணியில் ஈடுப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு பிரதான பொலிஸ் நிலையத்திற்கும் நான்கு பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மூன்று பேர் சிறிய நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நாடு முழுவதும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களில் 605 பொலிஸ் நிலையங்களுக்கு பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில், 20ஆம் திகதியிருந்து 05ஆம் திகதி வரை 712 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 102 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த ஒரு வன்முறை சம்பவம் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப் பெற்றுள்ளது.
அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 4552 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 160 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பொலிஸார் - அதிகரிக்கும் முறைப்பாடுகள் நாடு முழுவதும் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.இவ்வாறு நியமிக்கப்பட்ட பொலிஸார் மே மாதம் 8 ஆம் திகதி வரை பணியில் ஈடுப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஒவ்வொரு பிரதான பொலிஸ் நிலையத்திற்கும் நான்கு பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மூன்று பேர் சிறிய நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும், நாடு முழுவதும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களில் 605 பொலிஸ் நிலையங்களுக்கு பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.அதனடிப்படையில், 20ஆம் திகதியிருந்து 05ஆம் திகதி வரை 712 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 102 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த ஒரு வன்முறை சம்பவம் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப் பெற்றுள்ளது.அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 4552 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 160 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.