• May 18 2024

போக்குவரத்து சேவைகளில் புதிய மாற்றம் - டிஜிட்டல் மயமாகவுள்ள பேருந்து கட்டணம்..! samugammedia

Chithra / May 21st 2023, 6:53 am
image

Advertisement

நாட்டில் யார் எதிர்த்தாலும் அடுத்த மூன்று மாதங்களில் பேருந்து கட்டணத்தை செலுத்தும் முறையை டிஜிட்டல் மயமாக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை அனைத்து மாகாண சபைகளுக்கான போக்குவரத்து சபைகளும் மத்திய அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் தொடர்பான மாநாடு பதுளை – பசறை முகாமைத்துவ பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

பயணிகள் போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்கு சுலபமான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. டிஜிட்டல் மயமாக்கல், குறிப்பாக கியூ.ஆர் முறையைப் பயன்படுத்தி டிக்கெட் வழங்குவதன் மூலம் தற்போதுள்ள வருமானத்தை இரட்டிப்பாக்க வாய்ப்பு உள்ளது. 

யார் எதிர்த்தாலும் அடுத்த மூன்று மாதங்களில் டிக்கெட் வழங்குவதை கட்டாயம் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன். இப்போதும் அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

தற்போதுள்ள அமைப்பில் மாற்றம் வேண்டும் என மக்கள் கோரினால் அதற்கு தேவையான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். எரிபொருட்களின் தற்போதைய பயன்பாடு சுற்றுச்சூழலுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும். 

எனவே, குறைந்தபட்சம் 2030-ம் ஆண்டுக்குள் சூரிய சக்தியில் இயங்கும் வகையில் பொதுப் போக்குவரத்தை வடிவமைக்க வேண்டும். 

ஏற்கனவே மின்சார முச்சக்கர வண்டிகளை உற்பத்தி செய்யும் எமது நாட்டின் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் முச்சக்கர வண்டிகளை இறக்குமதி செய்வதற்கு பதிலாக மின்சார முச்சக்கரவண்டிகளை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறுவதற்கு பங்களிப்பு செய்யக்கூடிய திறமையான வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் நம் நாட்டில் உள்ளனர். 

அமைச்சர் என்ற வகையில் பொதுப் போக்குவரத்துத் துறையில் உள்ள இதர பிரச்சனைகளை ஆலோசித்து 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆன்லைன் மூலம் தீர்வுகளை வழங்கவும் அல்லது போக்குவரத்து ஆணைக்குழு, பேருந்து சங்கம் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் செய்யவும் எனது பங்களிப்பை வழங்கவும் தயாராக உள்ளேன். 

ஜூன் 30ஆம் திகதிக்கு பின்னர் அரை சொகுசு பேருந்து சேவைகள் நாட்டில் இயங்காது. சாதாரண சேவை சொகுசு சேவை மற்றும் அதி சொகுசு சேவை ஆகிய மூன்று சேவைகள் மட்டுமே இனி பயணிகள் போக்குவரத்திற்காக இயக்கப்படும்.



போக்குவரத்து சேவைகளில் புதிய மாற்றம் - டிஜிட்டல் மயமாகவுள்ள பேருந்து கட்டணம். samugammedia நாட்டில் யார் எதிர்த்தாலும் அடுத்த மூன்று மாதங்களில் பேருந்து கட்டணத்தை செலுத்தும் முறையை டிஜிட்டல் மயமாக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இதேவேளை அனைத்து மாகாண சபைகளுக்கான போக்குவரத்து சபைகளும் மத்திய அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் தொடர்பான மாநாடு பதுளை – பசறை முகாமைத்துவ பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.பயணிகள் போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்கு சுலபமான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. டிஜிட்டல் மயமாக்கல், குறிப்பாக கியூ.ஆர் முறையைப் பயன்படுத்தி டிக்கெட் வழங்குவதன் மூலம் தற்போதுள்ள வருமானத்தை இரட்டிப்பாக்க வாய்ப்பு உள்ளது. யார் எதிர்த்தாலும் அடுத்த மூன்று மாதங்களில் டிக்கெட் வழங்குவதை கட்டாயம் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன். இப்போதும் அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள அமைப்பில் மாற்றம் வேண்டும் என மக்கள் கோரினால் அதற்கு தேவையான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். எரிபொருட்களின் தற்போதைய பயன்பாடு சுற்றுச்சூழலுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும். எனவே, குறைந்தபட்சம் 2030-ம் ஆண்டுக்குள் சூரிய சக்தியில் இயங்கும் வகையில் பொதுப் போக்குவரத்தை வடிவமைக்க வேண்டும். ஏற்கனவே மின்சார முச்சக்கர வண்டிகளை உற்பத்தி செய்யும் எமது நாட்டின் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் முச்சக்கர வண்டிகளை இறக்குமதி செய்வதற்கு பதிலாக மின்சார முச்சக்கரவண்டிகளை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறுவதற்கு பங்களிப்பு செய்யக்கூடிய திறமையான வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் நம் நாட்டில் உள்ளனர். அமைச்சர் என்ற வகையில் பொதுப் போக்குவரத்துத் துறையில் உள்ள இதர பிரச்சனைகளை ஆலோசித்து 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆன்லைன் மூலம் தீர்வுகளை வழங்கவும் அல்லது போக்குவரத்து ஆணைக்குழு, பேருந்து சங்கம் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் செய்யவும் எனது பங்களிப்பை வழங்கவும் தயாராக உள்ளேன். ஜூன் 30ஆம் திகதிக்கு பின்னர் அரை சொகுசு பேருந்து சேவைகள் நாட்டில் இயங்காது. சாதாரண சேவை சொகுசு சேவை மற்றும் அதி சொகுசு சேவை ஆகிய மூன்று சேவைகள் மட்டுமே இனி பயணிகள் போக்குவரத்திற்காக இயக்கப்படும்.

Advertisement

Advertisement

Advertisement