• May 18 2024

30 யுனிட்டுகளுக்கு ரூ.3,000 - புதிய மின்கட்டண சூத்திரம் கறுப்புச் சந்தையைத் தாண்டிய விலை உயர்வு!

Chithra / Dec 20th 2022, 6:56 am
image

Advertisement

புதிய மின்சார விலைச்சூத்திரத்தின்படி, முதல் 30 யுனிட்டுகளுக்கான கட்டணம் எட்டில் இருந்து ஐம்பது ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும், அதன்படி, முதல் 30 யுனிட்டுகளுக்கு ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 1,500 ரூபாய் நிலையான கட்டணத்துடன் 3,000 ரூபாய் கட்டணமாக வழங்கப்படும் என எண்ணெய் துறைமுகங்கள் மீதான கூட்டு பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார்.

மின்சாரக் கட்டண திருத்தச் சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்த அவர், இது முற்றிலும் கறுப்புச் சந்தை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

எண்ணெய் துறைமுகங்கள் மீதான கூட்டு பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித மேலும் தெரிவிக்கையில்,

“மின் கட்டண திருத்த மசோதா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. முதல் யுனிட்டுக்கு இதுவரை வசூலிக்கப்பட்ட 8 ரூபாய் இப்போது 50 ரூபாயாகிறது. 1,500 நிலையான கட்டணங்கள். அதாவது 30 யுனிட் பயன்படுத்துபவர் மூவாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். அதிகரித்த மின் கட்டணம், மின் அலகும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதுபோல மின் கட்டணம் மும்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது கறுப்புச் சந்தையைத் தாண்டிய விலை உயர்வு. மின் உற்பத்தி நிலையங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் நோக்கத்தில் இந்த விலை உயர்வு செய்யப்படுகிறது.- என்றார்.

30 யுனிட்டுகளுக்கு ரூ.3,000 - புதிய மின்கட்டண சூத்திரம் கறுப்புச் சந்தையைத் தாண்டிய விலை உயர்வு புதிய மின்சார விலைச்சூத்திரத்தின்படி, முதல் 30 யுனிட்டுகளுக்கான கட்டணம் எட்டில் இருந்து ஐம்பது ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும், அதன்படி, முதல் 30 யுனிட்டுகளுக்கு ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 1,500 ரூபாய் நிலையான கட்டணத்துடன் 3,000 ரூபாய் கட்டணமாக வழங்கப்படும் என எண்ணெய் துறைமுகங்கள் மீதான கூட்டு பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார்.மின்சாரக் கட்டண திருத்தச் சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்த அவர், இது முற்றிலும் கறுப்புச் சந்தை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.எண்ணெய் துறைமுகங்கள் மீதான கூட்டு பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித மேலும் தெரிவிக்கையில்,“மின் கட்டண திருத்த மசோதா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. முதல் யுனிட்டுக்கு இதுவரை வசூலிக்கப்பட்ட 8 ரூபாய் இப்போது 50 ரூபாயாகிறது. 1,500 நிலையான கட்டணங்கள். அதாவது 30 யுனிட் பயன்படுத்துபவர் மூவாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். அதிகரித்த மின் கட்டணம், மின் அலகும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுபோல மின் கட்டணம் மும்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது கறுப்புச் சந்தையைத் தாண்டிய விலை உயர்வு. மின் உற்பத்தி நிலையங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் நோக்கத்தில் இந்த விலை உயர்வு செய்யப்படுகிறது.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement