ஹோட்டல்கள், உணவகங்களில் மது விற்பனைக்கு புதிதாக அனுமதி!

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு மென் மதுபானங்களான வைன் மற்றும் பியர் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை மென் மதுபான விற்பனைக்கான வருடாந்த அனுமதிப்பத்திரம் 25 ஆயிரம் ரூபாவிற்கு வழங்கப்பட உள்ளது.

இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக் காரணமாக சுற்றுலாத் துறை பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் படி மென் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை