• Sep 21 2024

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்: சர்வதேசத்தை நாடும் எதிர்கட்சி! samugammedia

Tamil nila / May 5th 2023, 10:03 pm
image

Advertisement

நாடாளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவர் பதவியை நிரந்தரமாக ஒருவருக்கு வழங்காமல், தற்காலிகமாக ஒருவருக்கு வழங்குவது தொடர்பில் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திற்கு அறிவிக்கவுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற தெரிவுக்குழு கூட்டத்தின் போது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நாடாளுமன்ற நிதிக்குழுவின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன பொது நிதிக்குழுவின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டு, பல நிதிச்சட்டங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

பின்னர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான மயந்த திசாநாயக்கவின் பெயரை முன்மொழிந்து நிறைவேற்றியதுடன், ஆரம்பத்தில் அந்த பதவியை ஏற்றுக்கொண்ட மயந்த திசாநாயக்க பின்னர் இராஜினாமா செய்தார். 

அதன்படி, எதிர்க்கட்சியிலிருந்து கலாநிதி ஹர்ஷ டி சில்வாவே இதன் தலைவர் பதவிக்கு பிரேரிக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை அந்த நியமனம் வழங்கப்படவில்லை. 

இந்த சூழ்நிலையிலேயே நாடாளுமன்ற  உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த நியமனத்திற்கு குழுவின் உறுப்பினரான சட்டத்தரணி சந்திம வீரக்கொடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதேவேளை, பொது நிதிக்குழுவிற்கு நிலையான தலைவர் ஒருவர் நியமிக்கப்படாமை தொடர்பில் அந்தக் குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.

நான்காவது தடவையாகவும் இந்த நியமனம் பிற்போடப்பட்டுள்ளமையானது வெட்கக்கேடான விடயம் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்: சர்வதேசத்தை நாடும் எதிர்கட்சி samugammedia நாடாளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவர் பதவியை நிரந்தரமாக ஒருவருக்கு வழங்காமல், தற்காலிகமாக ஒருவருக்கு வழங்குவது தொடர்பில் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திற்கு அறிவிக்கவுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.நேற்று நடைபெற்ற தெரிவுக்குழு கூட்டத்தின் போது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நாடாளுமன்ற நிதிக்குழுவின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சியின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன பொது நிதிக்குழுவின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டு, பல நிதிச்சட்டங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.பின்னர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான மயந்த திசாநாயக்கவின் பெயரை முன்மொழிந்து நிறைவேற்றியதுடன், ஆரம்பத்தில் அந்த பதவியை ஏற்றுக்கொண்ட மயந்த திசாநாயக்க பின்னர் இராஜினாமா செய்தார். அதன்படி, எதிர்க்கட்சியிலிருந்து கலாநிதி ஹர்ஷ டி சில்வாவே இதன் தலைவர் பதவிக்கு பிரேரிக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை அந்த நியமனம் வழங்கப்படவில்லை. இந்த சூழ்நிலையிலேயே நாடாளுமன்ற  உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு குழுவின் உறுப்பினரான சட்டத்தரணி சந்திம வீரக்கொடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இதேவேளை, பொது நிதிக்குழுவிற்கு நிலையான தலைவர் ஒருவர் நியமிக்கப்படாமை தொடர்பில் அந்தக் குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.நான்காவது தடவையாகவும் இந்த நியமனம் பிற்போடப்பட்டுள்ளமையானது வெட்கக்கேடான விடயம் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement