• Oct 18 2024

வடமாகாணத்தில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு புதிய நடைமுறை: மீறினால் சிக்கல்!

Sharmi / Dec 30th 2022, 1:11 pm
image

Advertisement

வடமாகாணத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் வருகின்ற புதிய ஆண்டில் இருந்து ஊழியர் நாளேடு பயன்படுத்தப்பட வேண்டும் இல்லாது போனால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண தனியார் ஊழியர் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் சிவகுமார் அறிவித்துள்ளார்.

இன்று (30) யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தனியார் நிறுவனங்களில் 80 வீதமான ஊழியர்கள் தமது வரவை நிறுவனங்களில்  பதிவு செய்வதில்லை. எனவே வருகின்ற புதிய ஆண்டில் இருந்து அவர்களுக்கான நாளேடு காட்சிப்படுத்துவதுடன் ETF, EPF  இலக்கமும் நாளேட்டில் காட்சிப்படுத்தப்பட  வேண்டும். இல்லாது தனியார் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம். 

பெரிய தனியார் நிறுவனங்களில் இந்த நடைமுறை இருக்கிறது. சிறிய நிறுவனங்கள், புடவை கடைகள்,உணவகங்களில் தான் இந்த நடைமுறை இருப்பதில்லை.

எனவே ஊழியர்கள் வேலைக்கு வந்து செல்லும் நேரம்  நாளேட்டில் பதிவு செய்து காட்சிப்படுத்தப்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு புதிய நடைமுறை: மீறினால் சிக்கல் வடமாகாணத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் வருகின்ற புதிய ஆண்டில் இருந்து ஊழியர் நாளேடு பயன்படுத்தப்பட வேண்டும் இல்லாது போனால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண தனியார் ஊழியர் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் சிவகுமார் அறிவித்துள்ளார்.இன்று (30) யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,தனியார் நிறுவனங்களில் 80 வீதமான ஊழியர்கள் தமது வரவை நிறுவனங்களில்  பதிவு செய்வதில்லை. எனவே வருகின்ற புதிய ஆண்டில் இருந்து அவர்களுக்கான நாளேடு காட்சிப்படுத்துவதுடன் ETF, EPF  இலக்கமும் நாளேட்டில் காட்சிப்படுத்தப்பட  வேண்டும். இல்லாது தனியார் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம். பெரிய தனியார் நிறுவனங்களில் இந்த நடைமுறை இருக்கிறது. சிறிய நிறுவனங்கள், புடவை கடைகள்,உணவகங்களில் தான் இந்த நடைமுறை இருப்பதில்லை.எனவே ஊழியர்கள் வேலைக்கு வந்து செல்லும் நேரம்  நாளேட்டில் பதிவு செய்து காட்சிப்படுத்தப்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement