• May 19 2024

இலங்கை பாடசாலைகளில் அறிமுகமாகும் புதிய முறை

Chithra / Jan 3rd 2023, 12:10 pm
image

Advertisement

பாடசாலைகளில் மாணவர்களை உள்வாங்குவது குறித்து புதிய முறையொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி பாடசாலைகளில் 2ஆம் தரம் முதல் 11ஆம் தரம் வரையிலான மாணவர்களை உள்வாங்குவதற்கான புதிய முறையொன்றை அறிமுகப்படுத்தவே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் நேற்றைய தினம் (02.01.2023) அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட இது தொடர்பான பிரேரணைக்கே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தரம் 6இற்கு உரிய முறைமை பொருந்தாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போதைய சுற்றறிக்கை ஏற்பாடுகளை மேலும் சீரமைப்பதன் மூலம், இடைநிலை தரங்களுக்கு மாற்றப்பட வேண்டிய மாணவர்கள் கண்டறியப்பட்டு, அனைத்து மாணவர்களுக்கும் நியாயமான மற்றும் சமமான அணுகல் வாய்ப்புகளை வழங்கும் வகையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும்.

அதன்படி, புதிய முறையின்படி, 1 - 5 வகுப்புகளில் ஒரு வகுப்பில் அதிகபட்ச மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆகவும், 6 - 11 வகுப்புகளில் அதிகபட்ச மாணவர்களின் எண்ணிக்கை 45 ஆகவும் உள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை பாடசாலைகளில் அறிமுகமாகும் புதிய முறை பாடசாலைகளில் மாணவர்களை உள்வாங்குவது குறித்து புதிய முறையொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அதன்படி பாடசாலைகளில் 2ஆம் தரம் முதல் 11ஆம் தரம் வரையிலான மாணவர்களை உள்வாங்குவதற்கான புதிய முறையொன்றை அறிமுகப்படுத்தவே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் நேற்றைய தினம் (02.01.2023) அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட இது தொடர்பான பிரேரணைக்கே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.தரம் 6இற்கு உரிய முறைமை பொருந்தாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அதன்படி, தற்போதைய சுற்றறிக்கை ஏற்பாடுகளை மேலும் சீரமைப்பதன் மூலம், இடைநிலை தரங்களுக்கு மாற்றப்பட வேண்டிய மாணவர்கள் கண்டறியப்பட்டு, அனைத்து மாணவர்களுக்கும் நியாயமான மற்றும் சமமான அணுகல் வாய்ப்புகளை வழங்கும் வகையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும்.அதன்படி, புதிய முறையின்படி, 1 - 5 வகுப்புகளில் ஒரு வகுப்பில் அதிகபட்ச மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆகவும், 6 - 11 வகுப்புகளில் அதிகபட்ச மாணவர்களின் எண்ணிக்கை 45 ஆகவும் உள்ளது.இது தொடர்பான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement